ளென்னும் கொடிகளால் ‘வாராதே’ என்று
தடுப்பதுபோற் காட்டிற்றென்று இளங்கோவடிகள் கூறுகின்றார்.
அத்தொடர்,
1‘போருழந் தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி
வாரல்என் பதுபோல் மறித்துக்கை
காட்ட’
என்பதாகும். இவ்வாறே கம்பநாடரும்
இராமபிரான் மிதிலைமா நகர்க்குச்
சீதாதேவியின் திருமணங் காணச்சென்றபோது,
நகர்க்கொடிகள் ‘வருக வருக’ என அழைப்பதுபோல்
தோன்றுவதாகக் குறிப்பிட்டார் ; அது :
2‘..............தெருநெடுங் கொடிகள்
என்னும்
கைகளைவீசி அந்தக் கடிநகர் கமலச் செங்கண்
ஐயனை ஒல்லை வாவென் றழைப்பது
போனற்து’
என்பதாம். இவைகளிற் கூறிய தற்குறிப்பேற்ற
அணிபோற் கொள்க. (33)
தமயந்தியின் இடை, என்றும்
நுடங்குமெனல்
41. என்றும் நுடங்கும் இடைஎன்ப ஏழுலகும்
நின்ற கவிகை நிழல்வேந்தே - ஒன்றி
அறுகால் சிறுபறவை அஞ்சிறகால் வீசம்
சிறுகாற்றுக் காற்றாது தேய்ந்து.
(இ - ள்.) ஏழ் உலகும் நின்ற கவிகை
நிழல் வேந்தே - இம்மண்ணுலகின் ஏழு தீவுகளிலும்
நிலைபெற்றுள்ள குடை நிழலையுடைய வேந்தே! அறுகால்
சிறுபறவை - ஆறுகால்களையுடைய சிறிய பறவைகளாகிய
வண்டுகள், ஒன்றி அம் சிறகால் வீசும் - ஒன்றுகூடித்
தம் அழகிய சிறகுகளினால் உண்டாக்குகின்ற, சிறு
காற்றுக்கு ஆற்றாது - மெல்லிய காற்றுக்கும்
பொறாமல், தேய்ந்து என்றும் நுடங்கும் என்ப -
மெலிவுற்று எப்போதும் துவளும் என்று கூறுவர்.
(க - து.) தமயந்தியின் இடை,
வண்டுகளின் சிறையிலிருந்துவரும் மெல்லிய
காற்றையும் பொறுக்கலாற்றாது துவளும் என்பதாம்.
1. சிலப்பதி, 13 : 189-90.
2. கம்பராமா, மிதிலைக் : 1.
|