பக்கம் எண் :

46நளவெண்பா[ சுயம்பர காண்டம்]

(வி - ரை.) தமயந்தியின் இடை, அவள் இருக்கும்பொழுதும் நிற்கும்பொழுதும் நடக்கும்பொழுதும் துவளுமென்பாராய், ‘என்றும் நுடங்கும் இடை’ என்றார். வண்டின் அழகிய சிறகினது காற்றினால் அவள் இடை நுடங்குமென்றதனால் அவ்விடையின் சிறுமை இயல்பும், அதனால், பெண்கட்குரிய சிற்றிடை அமைந்தவள் தமயந்தி யென்பதையும் உணர்த்தியவாறறிக.

மீனாடசியம்மையாரின் வனப்பை வகுக்கப்போந்த குமரகுருபர அடிகளார், அம்மையின் சிறிய இடை, பணிப்பெண்கள் வீசுகின்ற கவரியின் காற்றினால் நுடங்குமென்பாராய்,

1‘......தளரும் சிறுநுண்மருங்குல்.......
தெய்வமகளிர் புடையிரட்டும்
செங்கைக் கவரி முகந்தெறியும்
சிறுகாற் கொசிந்து குடிவாங்க’

என நயம்பெறக் கூறியதும் இக்கருத்தோடொப்பதை அறிக.

2‘நூலொத்த நேரிடை நொய்ம்மை

எண்ணாதுநுண் தேனசையால்

சாலத்த காதுகண் டீர்வண்டு

காள்கொண்டை சார்வதுவே’

எனத் திருக்கோவையாரின் வண்டோச்சி மருங்கணைதல் துறையினும் இடைநுண்மை கூறியதும் நோக்கத்தக்கது. (34)

தமயந்தியின் நெற்றியே மன்மதன் அன்புதீட்டுமிடம்

42. செந்தேன் மொழியாள் செறிஅளக பந்தியின்கீழ்
இந்து முறியென் றியம்புவார் - வந்தென்றும்
பூவாளி வேந்தன் பொருவெஞ் சிலைசார்த்தி
ஏவாளி தீட்டும் இடம்.

(இ - ள்.) பூ வாளி வேந்தன் - மலரம்புகளையுடைய மன்மதன், என்றும் வந்து - எக்காலத்தும் வந்துற்று, பொரு வெம்சிலை சார்த்தி - போர்செய்கின்ற கொடியவில்லைப் பொருந்தவைத்து, ஏ ஆளி தீட்டும் இடம் - அம்பின் வரிசைகளைத் தீட்டிப் பதமாக்கிக் கூர்மை செய்யுமிடம், செம்தேன் மொழியாள் - நல்ல தேன்போன்ற தீஞ் சொற்களையுடைய தமயந்தியின், செறி அளகபந்தியின்கீழ் - நெருங்கிய முன்னுள்ள கூந்தல் வரிசையின் பக்கலி

1. மீனாட்சி, பிள்ளைத் : 64. 2. திருக்கோவையார் : 45.