பக்கம் எண் :

மூலமும் உரையும்455

(வி - ரை.) முன்+நீர் - முன்பே உள்ள நீர். பழங்கால முதற்கொண்டே இந்நீர் இருத்தலின், முன்னீ ரென்றார். முந்நீர் என்றும் வழங்குவர். இதற்கு மூன்று தன்மையான குணமுடையதெனப் பொருளுரைப்பர்; அவை, காத்தல் படைத்தல் அழித்தல் என்பன. பல்வகைப் பொருள்களும் தன்னிடம் கொண்டு மக்கள் முதலிய எல்லாவுயிர்களையும் காப்பதும், எல்லாவகை உயிர்களையும் தன்னகத்துக் கொண்டுள்ளமையால் படைத்தலும், பள்ளத்தை மேடாகவும் மேட்டைப் பள்ளமாகவும் ஆக்கி அவ்விடங்களிலுள்ளவைகளை யெல்லாம் அடங்கப் போக்குதலின், அழித்தலுமாம். முந்நீர் என்பதும் முன்னீர் என்பதும் பண்புத் தொகை நிலைக்களத்துப் பிறந்த அன்மொழித்தொகையாய்க் காரணப் பெயராயிற்று. முறுவல் - பல். இளமடவார் பற்கள் வெண்மையும் ஒளியும் உடைமையால் முத்துக்கட்கு உவமஆகு பெயராக்கி, ஈண்டு ‘முறுவல்திரள்’ என்றார். இவ்வாறே ஆகு பெயராகக்கொண்டு திருஞானசம்பந்தர் தேவாரத்து அருளியிருப்பதும் ஈண்டு ஒப்ப நோக்கிப் படித்து மகிழற்பாலதாகலின்
ஈண்டு குறிப்பாம்.

1‘எண்ணார் முத்தம் ஈன்று மரகதம் போற்காய்த்து
கண்ணார் கமுகு பவளம் பழுக்கும் கலிக்காழி’

என்பதில் கமுகின் வெண்ணிறப் பூவை முத்தென்றும், அதன் பழத்தை பவளமென்றும் அருளுதல் காண்க. குவித்தல் - கடல் தன் அலைகளினால் முத்துக்ளை ஒதுக்கிக் கொணர்ந்து கரைகளில் நிரப்புதல். இங்கே அயோத்தி நகருக்குரிய கடலின் சிறப்புக் கூறியவாறாம். நல்+நீர் - நல்ல நீரையுடைய என்று பொருள் கூறலுமாம். அதினும் நன்னீர் - நல்ல பண்பு ; அதையுடைய மக்கட்குக் குணவாகு பெயராகக் கொண்டு பொருள் கூறப்பட்டது. மக்களாவார் நற்குண நற்செயல் உடைய ராக வாழ்தல் வேண்டும் ; அவ்வாறு வாழ்வதே ஒரு நாட்டுக்குச் சிறபுடைமை யாகும். வள்ளுவர் நாட்டுக்கு இலக்கணங் கூறுங்கால்,

2‘தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்
செல்வரும் சேர்வது நாடு’

என்றார். எனவே, அயோத்தி அத்தகைய சிறப்புடையது. ஆகவே, நளனை கார்க்கோடகன் அங்கே சென்று இருக்க எனப் பணித்ததும், அவ்வாறே நளன் சென்றதும் நல்லாரைச் சார்ந்தொழுதல் நன்றென்ற தன்மையான் என்க. முருகு : அழகு இளமை மணம் தேன் முதலிய பல பொருள் குறிக்கும் தூய தமிழ்ச் சொல். இதன்கண் முதலில் மெல்லெழுத்தும் இடையில்

1. திருஞான, தேவாரம். 2. திருக்குறள் : 731.