|
தோய்க்கும் : தோயும். தன்வினை;
ஈண்டுப்பிறவினை வாய்பாட்டாற் கூறப்பட்டது.
சேக்கிழாரும். இருதுபன்னன் வெற்றிச்
சிறப்பும், தறுகண்மையும் வேலின்மேல் வைத்துக்
கூறப்பட்டது. நறவம் - மணம். மலர் மாலைக்கு
அடைமொழி. தேரோட்டம் தொழிலில் வல்லவனாக
நளமன்னன் வாகுகனென்னும் பெயருடன் சென்று தன்
தன்வரவு கூறினானாகலான் ‘தேர் வேந்தன்’
என்றார். (25)
நளன், இருதுபன்னன் அழைக்கச் சென்று
அவனைக் காணுதல்
359. அம்மொழியைத் தூதர் அரசற் கறிவிக்கச்
செம்மொழியாத் தேர்ந்ததனைச் சிந்தித்தே - இம்மொழிக்குத்
தக்கானை இங்கே தருமின் எனஉரைப்ப
மிக்கானும் சென்மறான் விரைந்து.
(இ - ள்.) அம் மொழியை தூதர்
அரசற்கு அறிவிக்க - (இவ்வாறு நளன்) கூறியவற்றைச்
சென்று தூதர்கள் இருது பன்ன மன்னனுக்கு அறிவிக்க,
அதனை சிந்தித்து செம்மொழியா தேர்ந்து - அவன்
அதனைக் கேட்டு எண்ணி உண்மை மொழியென்று
தெளிந்து, இம்மொழிக்கு தக்கானை இங்கே தருமின்
என உரைப்ப - நீர் கூறிய இச் சொற்களுக்கு ஏற்ற
தகுதியுள்ள அவனை இங்கு அழைத்துக்கொண்டு வருக என்று
சொல்ல, விரைந்து மிக்கானும் சென்றான் - (தூதுவர்
வந்து அழைக்க) மேன்மை மிக்கவனான நளனும் விரைந்து
(அவனிடம் உள்ளே) போனான்.
(க - து.)நளன் கூறியவற்றைத்
தூதர்கள் தம் அரசனுக்குச் சொன்னார்கள்; அதைக்
கேட்ட மன்னவன் அதனை நன்கு எண்ணித் தெளிந்து ‘நீர்
கூறியவனை அழைத்து வருக’ என்றான். அவர்கள்
அழைக்க நளன் விரைந்து இருதுபன்னனிடம் சென்றான்
என்பதாம்.
(வி - ரை.) செம்மொழி - உண்மை
மொழி. அல்லது உண்மையான மொழி யென்பதைத் தான்
குறிப்பறிதலில் வல்லனாதலால் அச் சொற்களை
நன்கு ஆராய்ந்து தெளிந்தான் என்க. ஒருவன்
தன்னைப்பற்றி வல்லவன் என்று தானாகக்
கூறுவதானால்
|