|
பொலிவு. இது உன நூலார் கண்ட இயல்பும்,
இயற்கையுமாகும். இதனைப் பொய்யில் புலவர்,
1‘முகத்தின் முதுக்குறைந்த துண்டோ உவப்பினும்
காயினும் தான்முந் துறும்’
என்றார். முகத்தைப் போன்று
அறிவுடைப் பொருள் வேறொன்றுளதோ எனின் இல்லை ;
ஏனென்றால் ? ஒருவன் மகிழ்ந்தாலும் சினந்தாலும்
தன் நிலையை முன் காட்டி நிற்குந் தன்மையினால்
என்பது பொருள். எனவே, நளனைக் கண்ட இருதுபன்னன்
முகம், நளன் தோற்றப்பொலிவால் மகிழ,
மலர்ச்சிகொண்ட தென்பாராய்ச் ‘செய்ய முகம்
மலர்ந்து’ என்றார்.
ஒருவரை மற்றொருவர் வினவுங்கால் ஊரும்
பேரும் பிறவும் வினவுவது உலகியல் வழக்கமும்
இயல்புமாகும். அம்முறையில் நளன் ‘தேர்த்
தொழிலில் வல்லேன் ; சமையற் றொழிலிலும்
சிறந்துளே’னென்று முன்னரே கூறித் தூது
விடுத்தானாகலான், முதலில் ‘ஐயா நீ
எத்தொழிலில் மிக்கனை’யென்றும், பின் பெயர்
யாதென்றும் வினவினான் என்க. தேரோட்டுந்
தொழிலினும் சமையல் தொழிலினும் கைதேர்ந்த
சிறப்புடையவனாகலான் ‘கைத் தொழிலின்
மிக்கான்’ என்றார். கைத் தொழிலிற்
சிறந்தாரைத் திருவள்ளுவர்,
2‘இரவார் இரப்பார்க்கொன் றீவர்
கரவாது
கைசெய்தூண் மாலை யவர்’
என பாராட்டுவார். (27)
இருதுபன்னன் வினவியதற்கு நளன்
மறுமொழி கூறல்
361. அன்னம் மிதிப்ப அலர்வழியும் தேறல்போய்ச்
செந்நெல் விளைக்கும் திருநாடர் - மன்ன
மடைத்தொழிலும் தேர்த்தொழிலும்
வல்லென்யான் என்றான்
கொடைத்தொழிலும் மிக்கான் குறித்து.
(இ - ள்.) கொடை தொழிலின்
மிக்கான்-ஈகையிற் சிறந்தவனாகிய நளமன்னன்,
அன்னம் மிதிப்ப அலர்வழியும் தேறல் போய் -
அன்னப்பறவைகள் மிதித்தலினால் தாமரைப்
பூக்களிலிருந்து பெருக்கெடுத்து ஓடுகின்ற தேன்
(நீருடன் கலந்து) சென்று, செந்நெல் விளைக்கும்
திருநாடர் மன்ன - செந்நெற்
1, 2. திருக்குறள் : 707; 1035.
|