பக்கம் எண் :

460நளவெண்பா[ கலிநீங்கு காண்டம்]

பயிர்களை வளர்கின்ற அழகிய நீர்வளமிக்க கோசலநாட்டுக்கு வேந்தே!, மடைத்தொழிலும் தேர்த்தொழிலும் வல்லென் யான் என்றான் குறித்து - சமையல் வேலையினும் தேரோட்டுந் தொழிலினும் நான் வல்லவன் ஆவேன் என்று அவைகளைக் குறிப்பிட்டுரைத்தான்.

(க - து.)‘கோசல நாட்டுக்கு வேந்தே ! நான் சமையல் தொழிலிலும் தேரோட்டுகின்ற தொழிலிலும் வல்லவன்’ என்று நளன் அவைகளைக் குறித்துக் கூறினான் என்பதாம்.

(வி - ரை.) அன்னம் - அன்னப்பறவை. அலர் - மலர், நீர்ப் பூக்களைக் குறிக்குமாயினும் ஈண்டு வற்றாத நீரில் வளத்துடன் மலரும் பூவாகிய தாமரைப் பூவென்று பொருள் கூறப்பட்டது. அதனால் அந்நாட்டு நீர்வளத்தைக் குறித்தவாறாம். மலரிலிருந்து ஒழுகிய தேனானது பெருகி நீரோடு கலந்து செந்நெற் பயிர்களை வளர்க்கின்ற நாடு என்றமையால், மலரிலுள்ள தேன் தனக்குப் பயன் கருதாது பிறபொருளான நெற்பயிர்களுக்குப் பயனாக இருப்பதுபோலத் தன்னலங் கருதாது பிறர்நலமே கருதுகின்றவன் என்னும் குறிப்பிற்றாக நளன், ‘செந்நெல் விளைக்கும் திருநாடர் மன்ன’ என்றானென்று கொள்க. குறித்து - சுட்டிக் கூறி என்னும் பொருளது. (28)

தமயந்தி, நளனைத் தேடற்கு ஆளனுப்பல்

362. என்னை இருங்கானில் நீத்த இகல்வேந்தன்
தன்னைநீ நாடுகெனத் தண்கோதை - மின்னுப்
புரைகதிர்வேல் வேந்தன் புரோகிதனுக் கிந்த
உரைபகர்வ தானாள் உணர்ந்து.

(இ - ள்.) தண்கோதை - குளிர்ச்சி பொருந்திய கூந்தலையுடைய தமயந்தியானவள், மின்னுபுரை கதிர்வேல் வேந்தன் புரோகிதனுக்கு - மின்போன்று ஒளிவிட்டெறிக்கின்ற வேற்படை தாங்கிய (தன் தந்தையாகிய) வீமமன்னனுடைய புரோகிதனுக்கு, என்னை இருங்கானில் நீத்த இகல்வேந்தன் - என்னைப் பெரிய கானத்தில் விட்டுப்பிரிந்த போர்மன்னனாகிய நளமன்னனை, நீ நாடுக என - நீ தேடிக்கொணர்ந்து வாவென்று, உணர்ந்து இந்த உரை பகர்வது ஆனாள் - (அவன் தேடற்குரிய ஆற்றல் உள்ள