|
வன் என்பதை) நன்கு தெளிந்து
இவ்வாறாகக் கூறத் தொடங்கினாள்.
(க - து.)தமயந்தியானவள் தங்கள்
புரோகிதன் ஒருவனை நோக்கி, அவன் தேடி அறியத்
தக்கவன் என்பதை உணர்ந்து, ‘நீ என்னை வனத்தில்
தனியே விட்டுச் சென்ற மன்னனைத் தேடித் தெரிந்து
வருக’வென்று கூறினாள் என்பதாம்.
(வி - ரை.) இரு - பெருமை. இகல் - பகை.
பகைக்குரிய போரை உணர்த்திற்று, ஆகுபெயர். தன் -
அசைச்சொல். நாடுக என்னும் வியங்கோள்முற்று,
இறுதி அகரம் விகாரத்தாற்றொக்கது. மின், மின்னு
என உகரச்சாரியை பெற்றது. நெல்லு புல்லு கொள்ளு
என்பனபோல. இந்த உரைபகர்வதானாள் என்பது, மேல்
அடுத்த செய்யுளில் வருகின்ற தமயந்தி கூறுகின்ற
மொழிகளைக் குறித்து நின்றது. (29)
தமயந்தி, நளனைக் கண்டு தெளிதற்குப்
புரோகிதனுக்கு யோசனை கூறல்
363. காரிருளிற் பாழ்மண்ட பத்தேதன் காதலியைச்
சோர்துயிலில் நீத்தல் துணிவன்றோ - தேர்வேந்தற்
கென்றறைந்தால் நேர்நின் றெதிர்மாற்றம் தந்தாரைச்
சென்றறிந்து வாவென்றாள் தேர்ந்து.
(இ - ள்.) கார்இருளில்
பாழ்மண்டபத்தே - கரியநிறமுள்ள இருட்டில்
(நள்ளிராப் பொழுதில்) பாழடைந்த ஓர்
மண்டபத்திடத்து, தன் காதலியை சோர்துயிலில்
நீத்தல் தேர்வேந்தற்கு துணிவு அன்றோ-தன் காதல்
மனைவியை அயர்ந்த உறக்கத்தின் போது
விட்டுவிட்டுச் செல்லுதல் தேரையுடைய மன்னனுக்கு
ஒத்த செயலாகுமோ ?, என்று அறைந்தால் - என்று நீ
கூறினால் (அதைக் கேட்டவருள்), எதிர்மாற்றம்
தந்தாரை - அதற்கு மறுமொழியாக உரைக்கின்றவர்
எவராக இருப்பினும் அவரை, சென்று அறிந்துவா
என்றாள் தேர்ந்து - நீ போய் அறிந்து கொண்டு
வருகவென்று நன்கு உணர்ந்து கூறினாள்.
(க - து.)தமயந்தி புரோகிதனை
நோக்கி, ‘கொடிய இருட்டில் தன் மனையாளைப் பாழ்
மண்டபத்தே அயர்ந்த தூக்கங் கொண்டிருக்கும்போது
விட்டு விட்டுச் செல்லுதல்
|