|
அரசர்களின் செயலாகுமோ என்று நீ
கூறினால், அதைக் கேட்டு மறு மொழி கூறுகின்றவர்
யாரோ ? அவரை அறிந்துகொண்டு வருக’ என்று கூறினாள்
என்பதாம்.
(வி - ரை.) கருமை+இருள் - காரிருள்
எனப் புணர்ந்தது. மிக்க இருட்டு என்னும் பொருளது.
பாழ்மண்டபம் முள்ளும் கல்லும் செறிந்து ஆள்
நடமாட்டமற்ற மண்டபம். தமயந்தி புரோகிதனை
நோக்கி ‘மன்னனானவன் தன் மனையாளைக் கொடிய
இருட்டில் பாழ்மண்டபத்தே தன்னந்தனியாக விட்டு
விட்டுப் பிரிந்து செல்லுதல் இயற்கையாகுமோ ?’
என்று நீ கூறினால் அதற்கு எவரேனும் மறுமொழி
கூறினால் அவர் எவராயிருப்பினும் அவர் தன்மையைக்
கேட்டு அறிந்துவா’ என்று கூறினாளெனப் பொருள்
கூட்டியுரைக்க. தேர்தல் - நன்கு தெளிதல். (30)
புரோகிதன், நளனைத் தேடிச் சென்று
அயோத்தி நகர் அடைதல்
364. மின்னாடு மால்வரையும் வேலையும் வேலைசூழ்
நன்னாடும் கானகமும் நாடினான் - மன்னு
கடந்தாழ் களியானைக் காவலனைத் தேடி
அடைந்தான் அயோத்தி நகர்.
(இ - ள்.) (புரோகிதனானவன்) மின்
ஆடும் மால்வரையும் - மின்னல் ஒளி யெறிக்கின்ற
மேகங்கள் தவழ்கின்ற பெரிய மலைகளிலும்,
வேலையும் - கடற்கரைப் பகுதிகளிலும், வேலை
சூழ்நல்நாடும் - கடல்சூழ்ந்த பல்வகை நல்ல
நாட்டுப்புறங்களிலும், கானகமும் - காடுகளிலும்,
நாடினான் - பார்த்துக்கொண்டே சென்று, மன்னுகடம்
தாழ் களியானை காவலனைத் தேடி - நிலைபெற்ற
மதநீர் ஒழுகுகின்ற மயக்கத்தையுடைய
ஆண்யானைகளையுடைய நளமன்னனைத் தேடி,
அயோத்திநகர் அடைந்தான் - அயோத்தி
நகரத்துக்குப் போய்ச் சேர்ந்தான்.
(க - து.)நளனைப் புரோகிதனானவன்
மலைகளிலும் கடற்கரை ஓரங்களிலும் காடுகளிலும்
தேடிக்கொண்டே சென்று இறுதியில் அயோத்தி
நகருக்குப் போய்ச் சேர்ந்தான் என்பதாம்.
(வி - ரை.) மால்வரை யென்றமையால்
குறிஞ்சியும், வேலை சூழ் நன்னாடு என்றமையால்
நெய்தலும், கானகமும் என்றமை
|