பக்கம் எண் :

464நளவெண்பா[ கலிநீங்கு காண்டம்]

போல் இருந்ததால் கேட்டான் என்னாது, ‘ஏற்றினான்’ என்றார். ஏற்றுதல் - தைத்தல். தைத்தல் எளிதில் செல்லாத தொன்றை வேறொரு கருவிகொண்டு அடித்து உட்செலுத்துதல் என்னும் பொருளது. நளன் தன்மைக்கு அவன் மனச்சான்றுக்குப் பொருத்தமற்ற செயலாதலால் இச்சொல்லால் கூறினார்.

அயோத்தி மன்னர் தசரதன்பால் அவன் மனையாள் கைகேயி வேண்டிய வரங்கள் இரண்டு : ஒன்று, தன் மகன் பரதனுக்கு முடிசூட்டவேண்டும் என்பது; மற்றொன்று இராமன் நாடு துறந்து காடுநோக்கிச் செல்லவேண்டுமென்பது. இச்சொல்லைக் கேட்டபோது அவன் காதில் அச்சொல் விழுந்த நிலையைக் கம்பர்,

1‘இந்த நெடுஞ்சொல் அவ்வேழை கூறு முன்னே
வெந்த கொடம்புணில் வேல்நுழைந்த தொப்ப’

என்றார். வெந்தபுண், அது துன்புறுத்திக்கொண்டே ஆறாமல் இருக்கின்றது. அதில் வேலெடுத்துக் குத்தி அதுவும் உள்ளே பதிந்து செல்லுமானால் அப்புண்ணுடையார்க்கு எவ்வளவு தாங்க வொண்ணாத் துன்பமாக இருக்கும். அதுபோன்றிருந்ததாம் அம்மன்னனுக்கு ; இங்கும் நளமன்னனுக்குப் புரோகிதன் ‘கானகத்து..........போதுமோ’ என்றான். தான் தன் காதலியை விட்டுப் பிரிந்துவந்த செயலையே எண்ணி யெண்ணி ஏங்கிக் கொண்டிருந்த நிலையில் இவ்வெஞ்சொற் கேட்டது, காதில் ஈயத்தை உருக்கிவிட்டதுபோல் துன்பமாக இருந்ததால் அதைக் குறிக்க ‘தன் செவியில் ஏற்றினான்’ என்றார். பின்பு அவ்வுரைக்கு மறுமொழி கூறி அதனை மறுக்க எண்ணியவனாய் அவனை நோக்கி வந்தான் என்பாராய், ‘வந்தான் எதிர்’ என்றார். ஏற்றினான் என்பது முற்றெச்சம். இறந்தகால வினையாலணையும் பெயர்களாகச் சாற்றினான், ஏற்றினான் என்பன வந்தன. எதிர்-முன்னால் என்னும் பொருளது. முதனிலைத் தொழிற் பெயர். தான் என்பது அசைநிலை. (32)

நளன், புரோகிதனிடம் விடை கூறல்

366. ஒண்தொடி தன்னை உறக்கத்தே நீத்ததூஉம்
பண்டை விதியின் பயனேகாண் - தண்தரளப்
பூத்தாம வெண்குடையான் பொன்மகளை வெவ்வனத்தே

நீத்தானென் றையுறேல் நீ.

1. கம்பராமா, அயோத்தி, கைகேசிசூழ் : 20.