பக்கம் எண் :

468நளவெண்பா[ கலிநீங்கு காண்டம்]

கோவலனைப் பிரிந்துறைந்தகாலைக் கண்ணகியாரும், அவனைச் சேர்ந்து வாழ்ந்தகாலை மாதவியாரும் முறையே பிரிவுத் துன்பத் தானும் புணர்ச்சி இன்பத்தானும் அவர்கள் கண்கள் துன்பக் கண்ணீரும் இன்பக் கண்ணீரும் வடித்திருந்தனர் என்று ஆசிரியர் இளங்கோவடிகளார் ஆக்கியருளிய சிலப்பதிகாரச் செஞ்சொற் காப்பியத்தில் ஓர் அரிய உவமங்காட்டி உணர்த்துகின்றார். அது :

1‘உள்ளக நறுந்தா துறைப்பமீ தழிந்து
கள்ளுக நடுங்குங் கழுநீர் போல
கண்ணகி கருங்கணும் மாதவி செங்கணும்
உள்நிறை கரந்தகத் தொளித்துநீர் உகுத்தன’

என்பதாகும். இதில் அவ்விருவர்தம் கண்களும் பிரிவுத்துன்பம், புணர்வுஇன்பும் கொள்ளலால் நெஞ்சங்கள் தம் நிறையழிந்து துன்பும் இன்பும் கொண்டு கண்கள்நீர் பெருக்கின என்றருள்வதானும் அவ்விருவர்தம் அன்புநிலையும் தெளியப்படும். இவ்வன்பின் திறப்பாடே தமயந்தி கொண்டதூஉ மென்க. (34)

புரோகிதன், தமயந்திக்கு விடை கூறுதல்

368. வாக்கினான் மன்னவனை ஒப்பான் மறித்தொருகால்
ஆக்கையே நோக்கின் அவனல்லன் - பூக்கமழும்
கூந்தலாய் மற்றக் குலப்பாகன் என்றுரைத்தான்
ஏந்துநூல் மார்பன் எடுத்து.

(இ - ள்.) ஏந்துநூல் மார்பன் - பூணூலணிந்த மார்பை யுடையவனாகிய புரோகிதன் (தமயந்தியை நோக்கி), பூகமழும் கூந்தலாய் - மலர்மணம் கமழுகின்ற கூந்தலையுடைய தமயந்தி!, அ குலப்பாகன் - (நான், அயோத்தி மாநகரில் கண்ட) அவ்வுயர் குலத்தோன்றலாகிய தேரோட்டியொருவன், வாக்கினான் மன்னவனை ஒப்பான் - (அவன்) தன் மொழிகளினால் நளமன்னனையே ஒத்திருக்கின்றான், மறித்து ஒருகால் ஆக்கையே நோக்கின் அவன் அல்லன் - மீட்டும் ஒருமுறை அவன் உடம்பை உற்றுப் பார்த்தால் அம்மன்னவன் அல்லாதவனாக இருக்கின்றான், என்று எடுத்து உரைத்தான் - என்று விளக்கமாகக் கூறினான்.

(க - து.)புரோகிதனானவன் தமயந்தியை நோக்கி, ‘பூக்குழலாய், நான் அயோத்தியில் ஓர் தேரோட்டியைக்

1. சிலப், 5 : 235-8.