பக்கம் எண் :

மூலமும் உரையும்469

கண்டேன்; அவன் பேச்சு முறையினால் நம் நளமன்னன் போன்றே தோன்றுகின்றான்; ஆனால் உற்று நோக்கினால் அவன் உடல்நிலை அவனல்லன் என்று தோன்றுகின்றது’ என்று கூறினான் என்பதாம்.

(வி - ரை.) வாக்கு - பேச்சுமுறை. தான் ‘காதலியைக் காரிருளில்............வேந்தற்குப் போதுமோ’ என்று தானாகச் சொற்றதற்கு வேறொரு தொடர்பில்லாதிருந்தும் தொடர்புடையான்போல் நேரில் வந்து ‘ஒண்தொடி............விதியின் பயனே காண்’ என்று கூறினான். எனவே, வாக்கினான் மன்னவனென்று கூறினான். ஆனால் நளன் செந்நிறமுள்ள உடலமைப்பு வாய்ந்தவன். இவ்வாகுகன் உடல்நிறம், கருமையாகவுள்ளது. ஆதலால், ‘ஆக்கையே.........அவன் அல்லன்’ என்றான். அவன் சுட்டுப்பெயர். அல்லன்: எதிர்மறைக் குறிப்பு வினையாலணையும் பெயர். ஆக்கை - தோல் நரம்பு எலும்பு முதலியவற்றால் ஆக்கப்பட்டதென்னும் பொருளது. ஆ+க்+ஐ - ஆக்கை ஐகாரவிகுதி பெற்ற தொழிற்பெயர். பூக்கமழும் கூந்தலாய் என்பது நல்ல இயற்கைத் தன்மையுடையாள் என்னும் குறிப்புப்பொருள் கொள்ள நின்றது. மற்று : அசைநிலை. (35)

தமயந்தி, தன் இரண்டாம் சுயம்வரத்தை அறிவியெனல்

369. மீண்டோர் சுயம்வரத்தை வீமன் திருமடந்தை
பூண்டாளென் றந்தணநீ போயுரைத்தால் - நீண்ட
கொடைவேந்தற் கித்தூரம் தேர்க்கோலங் கொள்வான்
படைவேந்தன் என்றாள் பரிந்து.

(இ - ள்.) (தமயந்தி அந்தணனை நோக்கி) அந்தண - மறையவனே !, வீமன் திருமடந்தை மீண்டு ஓர் சுயம்வரத்தை - வீமமன்னனுடைய அழகுள்ள மகளாகிய தமயந்தியானவள் மறுமுறையும் ஒரு சுயம்பரத்திருமணத்தை, பூண்டாள் என்று நீ போய் உரைத்தால் - மேற்கொண்டாளென்று நீ அயோத்திக்குச் சென்று கூறுவாயானால், நீண்டகொடை வேந்தற்கு - பெருங் கொடை மிக்கவனாகிய இருதுபன்ன வேந்தனுக்கு, இத்தூரம் படைவேந்தன் தேர்க்கோலம் கொள்வான் என்றாள் பரிந்து - இவ்வளவு தொலையுள்ள இவ்விடத்துக்குப் படைகளையுடைய என் காதற் கணவன் தேரோட்டியாக அமைந்து வருவான் என்று அன்புடன் கூறினாள்.

(க - து.)‘அந்தண ! வீமன் மகளாகிய தமயந்தி மீண்டும் ஓர் சுயம்பரத்திருமணத்தை விரும்பினாளென்று