பக்கம் எண் :

470நளவெண்பா[ கலிநீங்கு காண்டம்]

நீ அயோத்திக்குச் சென்று கூறினால், இருதுபன்ன வேந்தனுக்குத் தேரோட்டுபவனாக அமைந்த எம் காதற் கணவனாகிய நளமன்னன் வருவா’னென்று அன்போடு கூறினாள் தமயந்தி என்பதாம்.

(வி - ரை.) மீண்டு - மறுமுறை என்னும் பொருளது. சுயம்பரம் - தானே தேர்ந்தெடுத்து மணஞ்செய்து கொள்ளும் முறை. அந்தணன் - அறவோன் என்பர் திருவள்ளுவர். அவர், ‘அந்தணர் என்போர் அறவோர்’ என்றல் காண்க. அந்தணன் - மறையவர் குலத்தோன் என ஈண்டுப் பொருள் கொள்க. நீண்ட கொடை - மிக்க கொடை. இல்லையென்றிரப்பார்க்கு இல்லையென்று கூறாது கொடுக்கும் ஈகைத்தன்மை. இம்முறையில் பண்டுதொட்டே தமிழகத்தில் வள்ளல்கள் பலர் இருந்தனர். அவர் பாரி காரி ஓரி முதலியவராவர். இதனால் இருதுபன்னன் ஏழைகட்சிரங்கியீயும் சிறப்புக்குறித்து நின்றது. நளனைப் படைவேந்தன் என்றார், அவன்றன் வெற்றிமேம்பாடு தெளித்தற் கெனக்கொள்க. பரிவு - இரக்கம் : அன்பு, ஈண்டுப்பரிந்து என வினையெச்சமாய், என்றாள் என்னும் வினைப்பெயர் கொண்டு முடிந்தது. (36)

மறையவன், அயோத்தி சென்று தமயந்திக்குச்
சுயம்பரமென வீமன் பறையறைவித்தான் எனல்

370. எங்கோன் மகளுக் கிரண்டாம் சுயம்பரமென்
றங்கோர் முரசம் அறைவித்தான் - செங்கோலாய்
அந்நாளும் நாளை அளவென்றான் அந்தணன் போய்த்
தென்னாளும் தாரானைச் சேர்ந்து.

(இ - ள்.) அந்தணன்போய் - மறையவன் (தமயந்தி கூறியவாறு அயோத்திக்குச்) சென்று, தென் ஆளும் தாரானை சேர்ந்து-அழகுமிக்க மலர்மாலையணிந்த இருதுபன்ன மன்னனைச் சேர்ந்து, செங்கோலாய் - முறையுடைய ஆட்சிகொண்ட வேந்தனே!, எம்கோன் மகளுக்கு இரண்டாம் சுயம்வரம் என்று - எம் விதர்ப்ப நாட்டு வேந்தனான வீமனானவன், தன் மகள் தமயந்திக்கு இரண்டாவது திருமணம் நிகழ்கின்றதென்று கூறி, அங்கு ஓர் முரசம் அறைவித்தான் - அவ்விதர்ப்ப நாட்டில் ஒரு பறையறைவித்து யாவர்க்கும் தெரியப்படுத்தினான், அந்நாளும் நாளை அளவு என்றான் - அச்சுயம்வரத்திருநாளும் (நெடு நாட்களில் இல்லை) நாளையளவிலேயே இருக்கின்றதென்று கூறினான்.