|
வீமன் தன் காதலி - வீமமன்னன்
மகளாகிய தமயந்தியானவள், மீண்டும் சுயம்வரத்தை
காதலித்தாள் என்று - மறுபடியும் சுயம்வரத்
திருமணஞ்செய்துகொள்ள விரும்பினாள் என, வேத
மொழிவாணன் விளம்பினான் - மறையவனாகிய சுவேதன்
கூறினானே, இதனுக்கு என் செய்கோ என்றான் விரைந்து
- இந்தச் சுயம்பரத்திருமணத்துக்குச் செல்வதற்கு
நான் என்ன ஏற்பாடு செய்வேன் என்று பரபரப்புடன்
கூறினான்.
(க - து.) இருதுபன்னனானவன் மறையவன்,
தமயந்திக்கு இரண்டாஞ்சுயம்வரமென்று கூறினானே,
அதற்கு நான் என்ன ஏற்பாடு செய்துகொண்டு
போவேனென்று பரபரப்புடன் கூறினான் என்பதாம்.
(வி - ரை.) வேதமொழிவாணன் -
மறையோதி வாழ்பவன் என்பது பொருள். மீண்டும் -
மறுமுறையும். உம்மை இறந்தது தழுவிய எச்சம்.
காதலித்தாள் - மிக விரும்பினாள் என்னும்
பொருளால் காதலிக்க வேண்டாத முதன்மையைக்
குறித்தது. காதலி - காதலிக்குரியாள். ஈண்டு மகள்
என்ற பொருளில் வந்தது. என்செய்கோ - செய்கு
தன்மை யொருமை. ஓகாரம் கழிவிரக்கப் பொருளில்
வந்தது. நாள் நெருங்கி நாளையென்று தமயந்தி
சுயம்பரம் வைத்திருக்கின்றது, இவ்வளவு சுருங்கிய
நாளில் எவ்வாறு இவ்வளவு தொலை தூரத்தைக்கடந்து
செல்வது என மனத்தில் விரைந்த குறிப்புடையனாய்
நாழிகை நாழிகையாகப் போது கழிந்து செல்வதற்கு
வருந்திக் கூறினானாதலால் அவன் மனநிலைத்தன்மை
உணர ‘என் செய்கோ’ என்ற சொல்லால்
உணர்த்தினார். மற்று : அசைநிலை. மின் செய்த
வேல் - மின்னல்போன்று ஒளிவிட்டெறிக்கின்ற
வேல். நாட்டை முறைப்படுத்திப் பகைவரின்றி
ஆள்கின்றான் இருதுபன்னன் என வேலின்மேல்
ஏற்றிக்கூறியவாறாம். (38)
அதுகேட்ட வாகுகன், இருதுபன்னனிடம் கூறல்
372. குறையாத கற்பினாள் கொண்டானுக் கல்லால்
இறவாத எந்திழையாள் இன்று - பறிபீறி
நெல்லிற் பருவரால் ஓடும் நெடுநாடா
சொல்லப் படுமோஇச் சொல்.
(இ - ள்.) (நளமன்னன் ஆகிய வாகுகன்
அதுகோட்டு இருதுபன்னனை நோக்கி) பறிபீறி
நெல்லில் பருவரால் ஓடும் நெடுநாடா - (மீன்
பிடிக்கும் கருவியாகிய) ஊற்றாலைக் கிழித்துக்
|