|
கொண்டு நெற்பயிர்கள் வளர்ந்துள்ள
வயல்களின் பெரிய வரால்மீன்கள்
தப்பிக்கொண்டு செல்கின்ற (நீர்வளம் மிக்க)
பெரிய கோசலநாட்டுக்கு வேந்தே !, குறையாத
கற்பினாள் - நிறைந்த கற்புடையாளும்,
கொண்டானுக்கு அல்லால் இறவாத ஏந்திழையாள் -
தன்னை மனையாளாகக்கொண்ட கணவனுக்கேயல்லாமல்
(பிறர் யார் பொருட்டும் தன்னுயிரை) விடுவதற்குத்
துணியாத தன்மையுடையவளுமாகிய மங்கையானவள், இன்று
இச்சொல் சொல்லப்படுமோ - (தன் கணவனை
விட்டுப்பிரிந்து தனித்திருக்கின்ற)
இக்காலத்தில் (இரண்டாம் சுயம்வரம் என்று
சொல்லப்படுகின்ற) இச்சொல்லையும் துணிந்து தன்
வாயாற் சொல்லத்தக்கதோ? (தகாது என்றபடி.)
(க - து.)இதைக்கேட்ட வாகுகனாகிய
நளன், ‘வேந்தே! தன்னைக்கொண்ட
கணவனுக்கேயல்லாமல் பிறர் யாருக்கும்
தன்னுயிரைவிடத் துணியாத கற்புடை மங்கையானவள்,
தனியாகப்பிரிந்து இருக்கிற காலத்தில்
இவ்வாறான இரண்டாஞ்சுயவரம் என்னுஞ் சொல்லைத்
தன்வாயினாற் கூடச்சொல்வதற்கு ஒருப்படுவாளோ?’
என்றான் என்பதாம்.
(வி - ரை.) குறையாத -
தன்னிலையினின்றும் மாறாத. கற்பு - தன் கணவன்
வழியே நடக்கின்ற உயரிய பண்பு. இறவாத -
இறந்துபடாத. என்பது, கணவன் ஊறுபட்டோ
இயற்கையாகவோ இறந்தவழி அவன் பிரிவு நோக்கி
மனந் தாழாது இறந்துபோவது. இது,
பேரன்புக்கறிகுறியாம். இவ்வன்புடைமை
சாலச்சிறந்ததென்பாராய், ‘இறவாத ஏந்திழையாள்’
என்றார். இதற்கெடுத்துக் காட்டாகப்
பூதப்பாண்டியன் மனைவி வரலாறும், கற்புக்கடம்பூண்ட
கண்ணகியார் வரலாறும், ஆரியப்படை கடந்த
பாண்டியன் நெடுஞ்செழியன் மனைவி
கோப்பெருந்தேவி வரலாறும், பிற
வரலாற்றுச்சான்றும் காணக்கிடக்கின்றன. பறி -
மீன்களைப்பிடித்துப் போடுகின்ற கூடையுமாம்.
நீர்வளம் மிக்கது கோசலம், அதனோடு
நிலவளத்தினும் உயர்ந்தது என்பன தெளிதற்கு
வரால்மீன் பறிபீறி ஓடுவதைக் குறித்தார். நீர்
வளத்தின் மேன்மையினால் நன்கு இரை
உண்டு கொழுத்திருக்கும் வரால் மீன்கள்,
பறியைக்கிழிக்கும் வலிமையுடையனவாயின. அவைகள்
கிழித்துக்கொண்டு செல்லுமிடங்கள் வெறும்
வெளியிடமன்று, நெற்பயிர்கள் மண்டிக்கிடக்கும்
பண்ணை நிலங்கள் என்பாராய், ‘நெல்லில்............ஓடும்’
என்றார். நெல் என்பது இருமடியாகுபெயர். தமயந்தி
இரண்டாஞ் சுயம்பரம் என்று சொன்ன சொல்லைத்
தன் வாயாற் சொல்வதற்கு நாணின
|