பக்கம் எண் :

மூலமும் உரையும்479

வனான இருதுபன்னன் மனத்தைப் பார்க்கினும் விரைந்து சென்றது, என்பதாம்.

(வி - ரை.) முந்து+ஐ - முந்தை : ஐகாரச்சாரியை பெற்ற மென்றொடர்க் குற்றுகரம்.

2‘ஐயீற் றுடைக்குற் றுகரமும் உளவே’

என்பது நன்னூல் விதியாகலான், முந்துவினை, முந்தைவினையென்றாயிற்று. இருதுபன்னன் செய்த தீவினையானது, தமயந்திக்கு இரண்டாவது சுயம்வரமென்று கேட்ட காலமுதல் தமயந்தியை நினைந்து நினைந்து காதல் மிக்கு நாம் இன்னுஞ் சிறிது நேரத்தில் போய்விடுவோம்; காண்போம்; திருமணத்திருமாலை நமக்கே கிடைக்குமென்று இடையறாத எண்ணமிட்டுக்கொண்டிருக்கும் அவன்றன் மனம்போல, நளன் பூட்டிய தேர்க்குதிரைகளும் இடையறாது விரைந்து சென்றது என, அவன் மனநிலையை விளக்கி அவன் வழியல்லா வழிச் செல்லுகின்ற அறந்திறம்பும் நெறியைக் கடிந்து கூறுவாராய் ‘மூவா மயல் கொண்டான் சிந்தையினும் கடுகச் சென்றதே’ என்றார். சிறந்த நல்லிசைப்புலவர்கள் தாம் ஆக்கியருளுகின்ற வரலாற்று நூல்களிலோ கட்டுக்கதைபோன்ற புனைந்துரை நூல்களிலோ தம் குறிக்கோள்களை விளக்கி அதன் வாயிலாக நாட்டுமக்களுக்கு அறிவுரை புகட்டுந் தன்மையராய் இலகுவர். இந்நன்முறையைக் குறிக்கோளாகக்கொண்டே ஈண்டுப் பிறன்மனை நோக்காத பேராண்மையின் உயர்வும் அதனைக் கைந்நழுவ விடுதலானாய இழிபும் புலப்பட ஈண்டு இவ்வாறு கூறினார்.

இக்கருத்தோடொப்பவே ஆசிரியர் இளங்கோவடிகளார் தாம் ஆக்கியருளிய சிலப்பதிகாரச் செஞ்சொற் காப்பியத்தில் அக்காப்பியத் தலைவனான கோவலன் தன் காதலன்பின் இல்லக் கிழத்தியாகிய கண்ணகியைவிட்டுத் துறந்து, கணிகை மகளாகிய மாதவிபால் விடுதலறியாவிருப்பினனாய் ஒழுக்கந்திறம்பி, அவ்வினையாளரோட பழகிக், கூத்தியர் பரத்தையர் இல்லங்களிலும் அவர் சேர்ந்து திரிதரும் தெருக்களிலும் போய்ப் போய்த் திரிந்ததை, அறமுறைக்கு ஒவ்வாதது ; இல்லறக்கடமை கொண்டார்க்கு எலாததெனக் கடிந்து அறமுறை கிளத்தி, மக்கட்கு அறிவுரை பகர்வாராய்த் தெருக்கள் தோறும் புதுப்புது மணங்களைக் கவர்ந்துகொண்டு வருகின்ற தென்றலை, அதன் காட்சியைக் கற்பார்க்கு அறிமுகப்படுத்துங்கால்,

1. நன்னூல் : 185.