அரவும் சூரும் இரைதேர் முதலையும்
உருமும் சார்ந்தவர்க் குறுகண் செய்யா
செங்கோல் தென்னவர் காக்கும் நாடு’
என அருள்வதும் காண்க. இதுபோன்றே
இருதுபன்னன் நாடு மிக்க உயர்ந்த நாடாக
இருக்கின்றதெனக் கோசலநாட்டுச் சிறப்பும்,
அந்நாட்டை ஆள்கின்ற வேந்தனான இருதுபன்னன்
மாண்பும் கூறியதுணர்க. பொன் - திருமகள்போன்ற
தமயந்தி வாழ்கின்ற என்று கொண்டு பொருள்
கூறலுமாம். இருதுபன்னன், தமயந்தி சுயம்வரங்காணவே
போந்தானாகலின் அது புலப்படப் ‘பொன்னகரி
சென்றடைந்தான்’ என்றார். நகர்: நகரி என இகர
விகுதிபெற்ற தொழிற்பெயர். உரிமைப்பொருள்
விகுதியுமாம். போர் வேட்டல் என்பது, போரை
விரும்புதல் : போரென்றால் மகிழ்ச்சி கொண்டு
செல்லல்.
1‘போரெனிற் புகலும் புனைகழல் மறவர்’
எனப் புறநானூற்றினும்,
2‘நானிலம் அதனின் உண்டு போரென
நவிலின் அச்சொல்
தேனினும் களிப்புச் செய்யும்
சிந்தையர்’
என்று கம்பர்தம் காப்பியத்தும்
வருதல்கொண்டு தெளிக. எனவே, இருதுபன்னன் வீரத்தை
அவன்றன் யானைமேல் இலக்கணையாக வைத்து ஏற்றிக்
‘கூற்றம் அன்னகரி ஒன்றுடையான்’ என்றார். (49)
இருதுபன்னன், தேரினின்றும் இறங்கிச்
செல்லுதல்
383. வெற்றித் தனித்தேரை வீமன் பெருங்கோயில்
முற்றத் திருத்தி முறைசெய்யும் - கொற்றவற்குத்
தன்வரவு கூறப் பணித்துத் தனிப்புக்கான்
மன்விரவு தாரான் மகிழ்ந்து.
(இ - ள்.) மன் விரவு தாரான் -
ஆட்சிச்சிறப்புப் பொருந்திய
வெற்றிமாலையணிந்த இருதுபன்ன மன்னன், வெற்றி
தனிதேரை - வெற்றி பொருந்திய ஒப்பற்ற தன்னுடைய
தேரினை, வீமன் பெரும் கோயில் முற்றத்து இருத்தி -
வீமமன்னனுடைய பெரிய அரண்மனை வாசலின் முன்பாக
நிறுத்தச்செய்து, முறை செய்யும் கொற்றவற்கு -
நடுவுநிலையோடு ஆட்சி புரிகின்ற மன்ன
1. புறம் : 31. 2. கம்பராமா, சுந்தர,
சிங்கரர் : 4.
|