|
இருந்து தூங்கியெழுந்த பொறிவண்டுகள்,
பின்னையும் போய் நெய்தற்கு அவாவும் நெடுநாட -
அதன் பின்பும் (நெய்தல் நிலத்துக்குச்) சென்று
அங்குள்ள கருங்குவளை மலர்த்தேனை உண்பதற்கு
விரும்புகின்ற பெரிய கோசல நாட்டுக்கு வேந்தே, நீ
என்பால் எய்தற்கு அவாவிய ஆறு என்-நீ என்னிடத்தே
வருவதற்கு விரும்பிய காரணமென்ன ? (என்று
கேட்டான்.)
(க - து.)‘தாமரை மலர்த்தேனை உண்ட
வரிவண்டுகள், அதில் தூங்கி எழுந்து நெய்தல்
நிலத்திற்குச் சென்று அங்கே கருங்குவளை
மலர்த்தேனை உண்பதற்கு அவாவுகின்ற கோசலநாட்டு
வேந்தே! நீ இங்கே என்னிடம் வருதற்குரிய
காரணமென்ன?’ வென்று இருதுபன்னனை நோக்கி வீமன்
கேட்டான் என்பதாம்.
(வி - ரை.) கன்னி - இளமை;
ஈண்டுப்புதுமை என்னும் பொருளில் வந்தது.
புதுத்தேனாவது மேலும் மேலும் ஊற்றெடுத்து வருகின்ற
தேன். தாமரைமலரிலுள்ள தேனானது பெருகிவர
அதனைஉண்ட வரிவண்டுகள், கண்டமட்டும் தேனைக்
குடித்த மயக்கத்தினால் அதிலேயே தூங்கிவிட்டுத்
தூங்கிவிழித்த பின்னும் தேனுண்ண அவாவிக்
கருங்குவளை மலர்த்தேனை உண்பதற்கு அவாவும் நாடன்
என்றமையால், நாட்டின் மருதநிலச் சிறப்பும்
நெய்தல்நிலச் சிறப்பும் புலப்பட கூறிய திணைமயக்கம்.
1‘கரும்பொற் கோட்டிளம்
புன்னைவாய்க்
கள்ளுண்டு காளைச்
சுரும்பு செவ்வழிப் பாண்செயக்
கொன்றைபொன் சொரிவ’
என்னும் திருவிளையாடற் புராணச்
செய்யுளில் வண்டுகள் புன்னைப் பூவின் தேனை உண்டு
பாடக் கொன்றைகள் மலர்ந்தன என்பதில் புன்னை,
நெய்தல்நிலக் கருப்பொருள். கொன்றை,
முல்லைநிலக் கருப்பொருள். இவ்விரண்டுக்கும்
திணைமயக்கம் கூறியவாறுபோற் கொள்க.
இங்கே கமலத்தேன் உண்ட வண்டானது,
கருங்குவளைத் தேனை விரும்பிச் சென்றதுபோல, நீ
உன் அயோத்திநகரில் உன் இல்லக்கிழத்தியுடன்
வாழ்வதை விட்டுவிட்டு இங்கே மற்றொரு சுயம்வரம்
விரும்பிவந்தவாறென்னெனக் குறிப்பால் வினவுவான்
போல உள்ளுறை உவமமாக அமைத்த ஆசிரியரின்
சதுரப்பாடு
1. திருவிளையாடல், நாட்டு : 39.
|