|
இருக்கின்றோம்; எங்கள் நிடதநாட்டை
வேறொருவன் ஆட்சிபுரிந்து வருகின்றா’ னென்றார்
என்பதாம்.
(வி - ரை.) மன்னன் - நிலை
பெற்றோன்; அரசன். உலகில் அல்லன கடிந்து நல்லன
புரிந்து வருவதால் எல்லா நலமும் நாட்டில் நிலைபெற
நிற்கச் செய்யும் வாய்ப்பினால் மன்னன்
எனப்பட்டது. என்னை?
1‘மாதவர் நோன்பும் மடவார் கற்பும்
காவலன் காவல் இன்றெனின் இன்றால்’
என்பது ஆன்றோர் கருத்தாகலின்.
நிடதத்தார் - நிடத நாட்டுக்குரிய குடிகள்.
வாழ்வேந்தன் - வாழுதற்குரிய வேந்தன். அவர்
வாழ்க்கை செம்மைப்படத் தக்காங்கு நாடித்
தலைச்செல்லா வண்ணத்தால் ஒத்து நெடுநுகத்துப்
பகல்போல் நடுநின்று, ஆட்சி புரிந்து வாழ்வை
வகுத்துக்கொடுப்போன்; எனவே நெறிமுறை தவறா மன்னன்
என்பதாம். அன்னையெனப் பொதுப்படக் கூறினார்,
அரசன் தேவி உலகிலுள்ள எவர்க்கும் தாயாம் என்ற
கருத்தினால்.
2‘தன்னை அளித்தான் தமையன் மனைகுருவின்
பன்னி அரசன் பயில்தேவி - தன்மனையைப்
பெற்றாள் இவர்ஐவர் பேசில்
எவருக்கும்
நற்றாயர் என்றே நவில்.
என்னும் நீதி வெண்பா உரையினாலும் இஃதுணரப்பெறும்.
இந்நகரில் என்பது, இந்நகர்க்கு
என வந்தது வேற்றுமை மயக்கம். மேல் ‘நிடதத்தார்
வாழ்வேந்தன்’ என்றதோடமையாது, தம் நாடு
பறிபோய் வேறொரு வேந்தன் ஆட்சிக்கு உள்ளானது
பொறாது விம்முதல் கொண்டவராய் உரிமை பாராட்டி,
‘எங்கள் வளநாடு’ என்றார். தம் அரசுரிமையை
நெறியல்லா நெறியிற் கவர்ந்தவன் பெயர்
சொல்வதற்குக் கூட ஒருப்படாத நெஞ்சினராய் ‘வேறொருவன்
ஆள்கின்றான்’ என்றார். இவைகள் ஒவ்வொன்றும்
அலைஅலையாக ஒன்றன்பின் ஒன்றாக வந்து தம்
நெஞ்சகத்தை அலைப்ப அதுபொறாது விம்முதலுற்று
நின்ற நிலையை ‘அழுது’ என்ற சொல்லால்
உணர்த்தினார். இதனால் இளங்குழந்தைகளானாலும்,
மறக்குடியில் பிறந்து வளரும்
வாய்ப்புடையவராகலான், தம் நிலைமாறி ஊழால்
கீழ்மை யடைந்தமை பொறாராய் தம் வீர மரபின்
மாண்பு தோன்றச் சினத்தோடு மறுமொழி கூறினமை
விளக்கியவாறாம். (58)
1. மணிமேகலை, 22: 208 - 9. 2. நீதி வெண்பா :
ந. - 32.
|