பக்கம் எண் :

500நளவெண்பா[ கலிநீங்கு காண்டம்]

1‘எடுத்தல் படுத்தல் நலிதல் உழப்பின்
திரிபும் தத்தமில் சிறிதுள ஆகும்’

என்னும் நன்னூல் நூற்பாவில் உயர்த்திக் கூறுதலை, எடுத்தல் என்றதூஉம் அறிக. (60)

இந்திரசேனன் சினந்து வாகுகனுக்கு மறுமொழி கூறுதல்

394. நெஞ்சால்இம் மாற்றம் நினைந்துரைக்க நீஅல்லால்
அஞ்சாரோ மன்னர் அடுமடையா - எஞ்சாது
தீமையே கொண்ட சிறுதொழிலாய் எங்கோமான்
வாய்மையே கண்டாய் வலி.

(இ - ள்.) (இளவரசன் நளனை நோக்கி) அடுமடையா -
சமையல் தொழில்புரிகின்றவனே! எஞ்சாது தீமையே கொண்ட சிறுதொழிலாய் - எப்போதும் தவறாமல் இழிவேகொண்ட கீழ்மையான தொழில்களையுடையவனே !, நெஞ்சால் இம்மாற்றம் நினைந்து உரைக்க - இவ்வாறு (நீங்கள் ஓடிப்போந்து இங்கண் உறைதல் இழுக்கென்று) கூறுஞ் சொல்லை மனத்தால் நினைந்து சொல்வதற்கு, நீ அல்லால் மன்னர் அஞ்சாரோ - நீயேயல்லாமல் அரசர்களும் கூடக் கூறுவதற்குக் கூசமாட்டார்களோ ?, எம் கோமான் வாய்மையே வலிகண்டாய் - எம் அரசனாகிய நளனின் உண்மை நெறியே உறுதியாகும் என்பதை நீ அறிவாயாக. (மற்றவைகளை அவன் மதித்து நடப்பதில்லை யென்றபடி.)

(க - து.) இளவரசன் வாகுகனை நோக்கி, ‘ஏ மடையனே ! சிறுமைத்தொழில் புரிவோய் ! நெஞ்சினால் எண்ணிப் பார்த்து இவ்வாறு இங்கண் உறைதல் இழுக்கென்று கூறுஞ்சொல், உன்னையன்றி மன்னர்களும்கூற மனங்கூசுவர் ; எம் வேந்தன் உண்மைநெறியே உறுதியென்பதை அறிக’ என்றான் என்பதாம்.

(வி - ரை.) நெஞ்சால் என்பதில் மூன்றனுருபு கருவிப் பொருளில் வந்தது. மாற்றம் : சொல். மறுதலையான நேர்மையற்ற மொழி. அல்லால்: குறிப்பு எதிர்மறை வினையெச்சம். அஞ்சாரோ என்பதில் ஓகாரம் வினாப்பொருட்டு. மன்னரும் என்பதிலுள்ள உம்மை விகாரத்தால் தொக்கது.

2‘சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து’

1. நன்னூல் : 88. 2. திருக்குறள் : 564.