பக்கம் எண் :

502நளவெண்பா[ கலிநீங்கு காண்டம்]

அமரச்செய்தார். இருவரும் அளவளாவி உரையாடினர். அது காலைத் திருநாவுக்கரசர் ‘ஐய! தாங்களமைத்த தண்ணீர்ப்பந்தர், மடம் முதலியவைகட்குத் தங்கள் பெயரைச் சூட்டாது வேறொரு பெயர் தீட்டியுள்ளதே’ என்றார். இதைக் கேட்டதும் அப்பூதியடிகட்குச் சினம் மூண்டது. ‘ஐய ! நீர் துறவுக்கோலம் பூண்டு சைவ நன்னெறியில் ஒழுகுபவர்போற் காட்சியறிக்கின்றீர் ; அவ்வாறிருந்தும் எம்பெருமான் திருநாவுக்கரசரின் பெருமையுணராதவராக இருக்கின்றீர் ; அவர் கல்லைத் தெப்பமாகக் கொண்டு கடலைக் கடந்து கரையேறிய செயற்கருஞ் செயலை உலகில் கேட்டறியாதவர் எவருமே இரார் ; நீரோ தவக்கோலம் பூண்ட துறவி ; திருநீறு, கண்டிகளணிந்த திருமேனியீர் ; இம்மங்கலக் கோலமுள்ள நீர் அறியாதிருக்கின்றீர்? எந்த உலகத்தில் இருக்கின்றீர் ? உம்மைப்பற்றி அறிந்துகொள்ளவேண்டு’ மென்று கடுகடுத்து மொழிந்தார். இதனைச் சேக்கிழார் பெருமான்,

1‘பொங்குகடற் கன்மிதப்பிற்
போந்தேறும் அவர்பெருமை
அங்கணரும் புவனத்தின்
அறியாதார் யாருளரே
மங்கலமாம் திருவேடத்
துடன்நின்றிவ் வகைமொழிந்தீர்
எங்குறைவீர் நீர்தாம்யார்
இயம்புமென இயம்பினார்’

என, தாம் ஆக்கிய திருத்தொண்டர் புராணத்துள் அழகுற எடுத்தமைத்து அருளுவாராயினார். இவ்வாறான உணர்ச்சிவயத்தால் அரசினங்குமரனாகிய இந்திரசேனனுக்குத் தன் தந்தையைக் குறித்து மாறுபட்ட கருத்துடன் பேசிய உரை கேட்டதும் சினம் மூண்டதென்க. (61)

இதுவும் அது

395. எந்தை கழல்இணையில் எம்மருங்கும் காணலாம்
கந்து சுளியும் கடாக்களிற்றின் - வந்து
பணிமுடியிற் பார்காக்கும் பார்வேந்தர் தங்கள்
மணிமுடியில் தேய்ந்த வடு.

1. பெரியபுராணம், அப்பூதி : 15.