பக்கம் எண் :

504நளவெண்பா[ கலிநீங்கு காண்டம்]

1‘ நின்றீமின் மன்னீர் நெருநல் திறைகொணர்ந்து
முன்தந்த மன்னர் முடிதாக்க - இன்றும்
திருந்தடி புண்ணாகிச் செவ்வி இலனே
பெருந்தண் உறந்தையார் கோ’

என வருவது கண்டு இன்புறுக. (62)

வாகுகன் மறுமொழி கூறல்

396. மன்னர் பெருமை மடையர் அறிவரோ
உன்னை அறியா துரைசெய்த - என்னை
முனிந்தருளல் என்று முடிசாய்த்து நின்றான்
கனிந்துருகி நீர்வாரக் கண்.

(இ - ள்.) (இளவரசனை வாகுகன் நோக்கி) மன்னர் பெருமை மடையர் அறிவரோ - அரசர்களுடைய அருமை பெருமைகளை அடுமடையர் அறிவார்களோ ?, உன்னை அறியாது உரைசெய்த என்னை - உன் பெருமையறியாமல் பேசிய என்னை, முனிந்து அருளல் என்று - சினந்துகொள்ள வேண்டாவென்று கூறி, கனிந்து உருகி கண் நீர்வார முடிசாய்த்து நின்றான் - மனம் தளர்ந்து கரையக் கண்களிலிருந்து நீர் (தாரைதாரையாகப்) பெருக்கெடுத்தோடத் தலைவணங்கி நின்றான்.

(க - து.) ‘ஐயனே! மன்னர்களின் உயர்வை மடையர்கள் அறிவார்களோ? உன் அருமை பெருமை உணராது சொன்னதற்கு என்மீது சினந்துகொள்ள வேண்டா’ என்று கூறி, நளன் மனங்கரைந்து கண்ணீர் ஒழுக நின்றான் என்பதாம்.

(வி - ரை.) மன்னர், மடையர் என்பன அவ்வவர்களின் தன்மைகளை விளக்கிநின்றன. மடையர் என்பது சமையல் செய்வோர் என்னும் பொருளோடமையாது, மடையர் - அறிவற்றவர் என இருபொருள் நயந்தோன்றி நிற்றலை அறிக. மடையர் : மடம் என்னும் பண்புப் பெயரடியாகப் பிறந்த குறிப்பு வினைப்பெயர். அறிவரோ என்பதில், ஓகாரம் அறியாரென்ற மறுதலைப் பொருளைத் தருதலால் எதிர்மறை. முனிந்தருளல் - முனியாதே என்னும் எதிர்மறைப் பொருளில் வந்த முன்னிலை ஏவல் வியங்கோள், அல்விகுதி பெற்றுவந்தது. அல்

1. முத்தொள்ளாயிரம் : 67.