|
விகுதி உடன்பாட்டினும் எதிர்மறைப்
பொருளினும் வரும். இதனை,
1‘பயனில்சொல் பாராட்டு வானை
மகனெனல்
மக்கட் பதடி யெனல்’
என்னும் திருக்குறளில்
இவ்விருபொருளும் உணர்த்துதல் அறிக. முடிசாய்த்தல்
- தலைவணங்குதல். தன் குழந்தைகளின் மென்
சொற்கேட்டின்புற அவர் உளப்பாங்கையறியக்
கூறினான் நளனாயினும் தன்மக்கள் கூறிய
மொழிகளும், அதிலும் தன் மகன் கூறிய வீரவுரைகளும்
கேட்டதும் மபணிந்த மொழியால் கூறி, அவன்
சினத்தை மாற்ற முற்பட்டு ‘என்னை முனிந்தருளல்’
என்றானென்க. அவர்கள் நிலையையும் தன்னிலையையும்
உணர உணர ஆற்றெணாத்துன்பமும் அளப்பற்ற காதலும்
பொங்கி மேலெழ நின்றதை ‘கனிந்துருகி
நீர்வாரக் கண்’ என்றார். உவப்பினும்
வருந்தினும் உள்நின்ற கருத்தை வெளிப்பட நீரைப்
பெருக்கிக் காட்டுவது கண்ணேயாதலான் அதன்மேல்
வைத்துக் கூறினார்.
‘2மண்டு பிணியால் வருந்து
பிறவுறுப்பைக்
கண்டு கலுழுமே கண்’
என்றார் பிறரும். (63)
தமயந்தி, இச்செய்திகள் கேட்டுத்
துயருறல்
397. கொற்றக் குமரனையும் கோதையையும் தான்கண்டு
மற்றவன்தான் ஆங்குரைத்த வாசகத்தை - முற்றும்
மொழிந்தார்அம் மாற்றம் மொழியாத முன்னே
அழிந்தாள் விழுந்தாள் அழுது.
(இ - ள்.) (முன் அனுப்பிய
தோழியர்கள் தமயந்தியிடத்திற் சென்று)
கொற்றக் குமரனையும் கோதையையும் அவன் கண்டு -
வெற்றிக்கேற்ற பண்புள்ள தன் மகனையும் தன்
மகளையும் வாகுகன் பார்த்து, அங்கு உரைத்த
வாசகத்தை - அவ்விடத்தில் அவன் கூறிய மொழிகளை,
முற்றும் மொழிந்தார் - முழுதும் விடாமற்
கூறினார்கள், அம்மாற்றம் மொழியாத முன்னே -
அவ்வுரைகளை, அவர்கள் சொல்லி முடிப்பதற்கு முன்பே,
அழிந்தாள் அழுது விழுந்தாள் - (அவள்) மனமுடைந்து
அழுதபடியே கீழே விழுந்தாள்.
1. திருக்குறள் : 196. 2. நன்னெறி : 20.
|