பக்கம் எண் :

மூலமும் உரையும்507

செய் அம்கை இரண்டும்-மணப்பொருள்களைத் தொட்டுத் தடவி (என்) கூந்தலை ஒழுங்குசெய்து அழகுபடுத்திய அழகிய கைகள் இரண்டும், அடுபுகையால் இங்ஙன் கருகியவோ என்று பதைத்து அழுதாள் - சமைக்குங்கால் உண்டாம் புகையினால் இப்படிக் கருநிறம் பெற்றனவோ என்று மனந் துடிதுடித்துப் புலம்பிமனாள்.

(க - து.) முன்பு தன் கணவனைக் கண்டுகளித்த தமயந்தியானவள், நளனைக்கண்டு, ‘என் கூந்தற்கு மணமூட்டி அழகுபடுத்திய அழகுள்ள கைகள் சமையல் தொழில் செய்ததால் இவ்வாறு கருநிறம் பெற்றனவோ!’ என்று மனம் பதைபதைத்து அழுதாள் என்பதாம்.

(வி - ரை.) கொங்கு - மணம். அது இறுதி ஐகாரச் சாரியை பெற்றது. அளைதல் - கலக்குதல்; மணப்பொருள்களை ஒன்றுபடுத்திச் சேர்த்தல். முன்பு தம் நகரில் வாழ்ந்த காலத்தில் தனக்கு அழகுபடுத்தி ஒப்பனை செய்த சிறந்த கைகளின் நிறம் மாறி, இன்று கன்னங்கரேல் என்றிருக்கின்றனவே என்று கதறினாள் ; பதறினாள். இவனே தன் காதலனாகிய வேந்தன் என்று தெளிந்தபின். கம்பரும் தம் காப்பியத்தில் திருமாலும் திருமகளும் என அவதாரம் கற்பித்து இவ்விருவரும் பிரிந்துறைந்ததாகக்கொண்டு முதல்முதல் இராமனும் மிதிலைப் பொன்னும் ஒருவரை ஒருவர் கண்டபோது காதல் கைம்மிகுந்து இருவர் மனமும் ஒன்றுபட்டன. அப்போது 1பிரிந்தவர் கூடினால் பேசவேண்டுமோ’ என்றார். இங்கேயும் பிரிந்துறைந்த காதலன் வந்தானென்று குணங்குறி செயல்களினால் உய்த்துணர்ந்த தமயந்தி தனக்குப் பண்டைக் காலத்தில் அவன் செய்த ஒப்பனை முதலியவற்றை நினைந்தும் அன்பின் திறத்தை ஆழ்ந்தெண்ணியும் கலக்கமுற்றாள். அக்கலக்க நிலையை ‘இங்ஙன் கருகியவோ’ என்று கூறினாளாகக் கூறினார். பருகுதல் - உண்டல். நாவின் செயல் இங்கே இலக்கணை வழக்காகக் கண்ணுக்கு ஏற்றி உரைக்கப்பட்டது. 2‘நாற்றம் கேட்டலும் தின்ன நயப்பதோர்’ என்றும் 3‘பருகுவன் பைதல்நோய் எல்லாம் கெட’ என்றும் பிறர் கூறுதலானும் அறிக. வேல் கண்ணாள்: வேல் போன்ற கண்ணாள் என விரிதலால் உவமைத்தொகை. வேல், கண்கட்கு வடிவத்தானும் கூர்மையானும் எதிர்ப்பட்ட காதல் ஆடவர் உயிரைக் கொள்ளை கொள்ளுதலானும் உவமமாகக் கூறப்படுவதாம். எனவே, வடிவ, வினை உவமமெனக் கொள்க.

1, 2. கம்பராமா, பால, தாடகை : 64.
3. திருக்குறள் 1266.