பக்கம் எண் :

மூலமும் உரையும்51

என்று, காமத்தால் அழிவுண்டு மனநிலை திரிந்த இலங்கை வேந்தன் தன்மையை விளக்கியதறிக. காதல் கைம்மிக்கார்க்கு மானம் நாணம் முதலிய இயற்கைக்குணங்கள் திரிவது இயற்கை யாதலால் ‘அற்றது மானம் அழிந்தது நாண்’ என்றார். மறைபொருளான ஒன்றைக்கூற முற்படுவார்க்கு தாம் சொல்லப்போம் காரியத்தை விரைவில் சொல்லவொண்ணாது தடுமாற்றமுறுவர். இஃது உலக இயல்பு. அதுபோல் நளன், ‘இனி, உன் வாய்ச் சொற்களால்தான் இருக்கிறது ; நீ தமயந்தியிடம் சென்று என்னிலையைக் கூறி மணந்துகொள்ளுதற் கேற்றவைகளைச் செய்,’ என்று சொல்ல முற்படுவோன், சொல்லற்குத் தடுமாற்றமுற்று ‘உன் வாயுடையது’ என்றான். அன்றி உன் வாயினிடத்தே உள்ளது எனச் சுருங்கச்சொல்லிக் குறிப்பால் உணர்த்தினான் எனலுமாம். தேர்தல் - மனம் தெளிவாதல். (38)

அன்னம் தமயந்தியிடம் செல்லுதல்

46. வீமன் திருமடந்தை மென்முலையை உன்னுடைய
வாம நெடும்புயத்தே வைகுவிப்பேன் - சேம
நெடுங்குடையாய் என்றுரைத்து நீங்கியதே அன்னம்
ஒடுங்கிடையாள் தன்பால் உயர்ந்து.

(இ - ள்.) சேம நெடும் குடையாய்-(உலகமக்கட்கு) நன்மை செய்கின்ற விரிந்த (வெண்கொற்றக்) குடையையுடையவனே, வீமன் திருமடந்தை மெல் முலையை - வீமராசனின் செல்வ மகளான தமயந்தியின் இளமார்பினை, உன் உடைய வாம நெடும் புயத்தே வைகுவிப்பேன் - உன்னுடைய அழகிய உயர்ந்த தோள்களைப் பொருந்தச் செய்விப்பேன், என்று அன்னம் உரைத்து - என்று அன்னப்பறவை கூறி, ஒடுங்கு இடையாள் தன்பால் - சிற்றிடையாளாகிய தமயந்தியினிடத்து, உயர்ந்து நீங்கியது - பறந்து போயிற்று.

(க - து.) ‘ தமயந்தியை உனக்கே மனைவியாக்குவேன் ’ என்று நளனிடம் கூறிவிட்டு, தமயந்திபால் அன்னம் பறந்து சென்றது.

(வி - ரை.) வீமன் திருமடந்தை, வீமராசனின் அழகிய மகள் என்றலுமாம். ‘தமயந்தியைப் பிறர் எவருக்கும் மாலை சூட்டாமல் உனக்கே மாலைசூட்டி மணம்புணரச் செய்வேன்’ என்று அன்னம் நளனுக்கு உறுதிமொழி உரைத்தது. ‘சேம நெடுங்குடை’ உலகில்வாழும் உயிர்கட்கெல்லாம் அறநெறி