1‘கோழிலை வாழைக் கோண்மிகு பெருங்குலை
ஊழுறு தீங்கனி உண்ணுநர்த் தடுத்த
சாரற் பலவின் சுளையொ டூழ்படு
பாறை நெடுஞ்சுனை விளைந்த தேறல்
அறியா துண்ட கடுவன் அயலது
கறிவளர் சாந்தம் ஏறல்செல் லாது
நறுவீ அடுக்கத்து மகிழ்ந்துகண் படுக்கும்
குறியா இன்பம் எளிதின் நின்மலைப்
பல்வேறு விலங்கும் எய்தும் நாட !
உன்னை ஒளியாது - உன்னை மறைக்காமல்
உன்னுருக்காட்டு எனக் கூட்டிப் பொருள் கொள்க.
ஐதலை, பைதலை யென்பன, ஐந்தலை, பைந்தலையென இசை
இன்பம்பெற மெலி விரிந்து நின்றன. (69)
வாகுகன், கார்க்கோடகன் தந்த ஆடைகளை
உடுத்தல்
403. அரவரசன் தான்கொடுத்த அம்பூந் துகிலின்
ஒருதுகிலை வாங்கி உடுத்தான் - ஒருதுகிலைப்
போர்த்தான் பொருகலியின் வஞ்சனையால் பூண்டளிக்கும்
கோத்தாயம் முன்னிழந்த கோ.
(இ - ள்.) (இவ்வாறு இருதுபன்னன்
வேண்டியகாலை) பொருகலியின் வஞ்சனையால் -
பகைமையை விளைவிக்கும் கலியினது வஞ்சச்
குழ்ச்சியினால், பூண்டு அளிக்கும் கோ தாயம் முன்
இழந்த கோ-சூதுவிளையாடலைத் தனக்கு உரிமையாகக்
கொண்டு தான் யாவரையும் பாதுகாக்கின்ற
அரசாட்சியுரிமையை அக்காலத்தின் (எளிதாக)
இழந்துவிட்டவனான நளமன்னன், அரவு அரசன் தான்
கொடுத்த அம் பூந் துகிலின் - பாம்புக்கு வேந்தனான
கார்க்கோடகன் தனக்கு முன்புதந்த அழகிய மெல்லிய
ஆடைகளுள், ஒரு துகிலை வாங்கி உடுத்தான் ஒரு துகிலை
போர்த்தான் - ஓர் ஆடையை யெடுத்துத் (தன்
அரையில்) கட்டிக் கொண்டான், மற்றொன்றை
(மேலாடையாகப்) போர்த்துக் கொண்டான்.
(க - து.) இவ்வாறு இருதுபன்னன்
வேண்டியகாலை, நளமன்னன், தனக்குக்
கார்க்கோடகன் முன்புகொடுத்த
1. அகம் : 2.
ந. - 33
|