|
தீவினைகள் தீர்ந்து ஒழிவதுபோல
விட்டு நீங்கிற்று. (பழைய தன்னுருவம்
வந்தெய்திற்று.)
(க - து.) அக்காலத்தில் தன்
மனைவியைப் பிரிந்தது முதல் மறைந்து வாழும்
வாகுகனாகிய நளனுக்குத் திருமாலின் திருவடிகளைப்
பற்றுக்கோடாகக்கொண்டு வாழும்
மெய்யடியார்களின் தீராத தீவினைகள் தீர்ந்து
ஒழிவது போலத் தன் உண்மை வடிவம் வந்தது
என்பதாம்.
(வி - ரை.) மிக்கோன் : மிகு
என்னும் உரிச்சொல்லடியாகப் பிறந்த பண்புப்
பெயர். திருமால் தேவர்களுள் சிறந்தவனாதலான், ‘மிக்கோன்’
என்றார். ‘தேவில் திருமால் எனச் சிறந்த
தென்பவே’ எனத் திருவள்ளுவ மாலையினும்
திருமாலைத் தேவர்களுட் சிறந்தானென உரைத்தலால்,
மிக்கோன் என்பதற்குத் தேவர்களுள் சிறந்தவன்
என்று பொருள் கூறப்பட்டது. உலகளந்த மெய்யடி
என்பது, மாவலியரசன்பால் வாமன வடிவெடுத்து மூவடி மண்
பெற்று, உலக முழுதையும் தன் அடிகளால் ஈரடியளவினதாக
அளந்த பாகவதக் கதைபற்றிய வரலாற்றைக்
கொண்டுரைத்தார். ஊழி பெயராப் பிறவா இறவாப்
பெருமையன் என்பாராய் அவன் திருவடி மேல் வைத்து ‘மெய்யடி’
என்றார். இறைவன் திருவடி சார்பாகப்
பற்றுக்கொண்டொழுகுவார்களுக்குப் பந்த பாசங்கள்
நீங்கி என்றும் மாறா இறையடி இன்பத்தில்
திளைத்திருப்பது உறுதியாகலான்,
அவ்வுறுதிப்பாட்டின் உண்மை தோன்ற ‘புக்கோர்
அருவினைபோல்’ என்றார். நளன் கார்க்கோடகன்
ஈந்த ஆடைகளைப் புனைந்தவுடன் அவன் கொண்டிருந்த ‘வாகுகன்’
என்னும் பெயர் தாங்கிய கரிய சிறுவடிவம் துடுமென
நீங்கி நளனுக்குரிய உண்மை உருவம் தோன்றிய
காட்சிக்கு உவமங் கொடுத்தார். திருமால் அடியைச்
சேர்ந்தார் தீவினை நீங்கி உண்மை யொளிபெற்று
இன்புறுதல் போல, நளனும் தான் இடையிற்கொண்ட
கரிய உரு நீங்கி இயற்கைமயான செவ்விய வடிவுபெற்று
நின்றானென உவமத்துக் கேற்ற உவமேயம் விரித்துக்
கொள்க.
அக்காலம்-பண்டறிசுட்டாய்க்
காட்டில் பிரிந்த நிகழ்க்சிக்கு அடிப்படையாக
நின்ற காலத்தைக் குறித்தது. கரந்து உறைதல்-நளன்
தன்னை இன்னானென யாரும் தெரியாவாறு மறைந்து
வாழுதல். மான் - குதிரை. அகம் - அதனை உள்ளிட்டது
என்னும் பொருட்டாகக் கொண்டு பூண்ட என உரை
வகுத்துரைக்கப்பட்டது. நளன் செலுத்தும் தேர், நல்ல
இலக்கணம் வாய்ந்த குதிரைகளைத் தேர்ந்தெடுத்து
மனநிலை தெரிந்து ஓட்டுதற்
|