|
‘மன்னவனைக்............நீரான் மறைத்தன’
என்றார். தமயந்தியின் கண்கள் இரக்கப்பண்பு
வாய்ந்த இன்கண்கள் ; நளன் உருவைக் காணாதவாறு
கண்ணீரால் மறைத்த கொடுந்தன்மை கருதி அவைகளை ‘வெவ்விடத்தோ
டொத்த விழி இரண்டும்’ என்றார், விடத்துக்கு
நல்ல தன்மை இல்லாத காரணங்கொண்டு. இங்குத் தாம்
செய்யாத தன்மையவான கண்களைச் செய்வன போல்
கூறியது, 1‘நோயும் இன்பமும்’ என்னும் பொருளியல்
(2) நூற்பாவில் ‘உணர்வுடையதுபோல்’ என்னும்
பகுதிக்கண் வரும் உணர்வில்லாததை, அஃதுடையதுபோல்
ஏற்றிக்கூறுவதாகச் சொன்ன விதியால் அமைத்துக்
கொள்க. ஆல் என்னும் மூன்றனுருபு கண்ணொளியை
மறைத்தலாகிய கருவிப் பொருளில் வந்தது. இவ்வாறே
இளங்கோவடிகளும் தற்குறிப்பேற்ற அணியாகக்
கோவலன் மதுரைக்குச் சிலம்பு விற்றற்குத் தன்
காதலி கண்ணகியாரோடு சென்ற காலை மதுரை
நகரத்தின் மாடக் கொடிகள் காற்றால் அசைவதைக்
‘கோவல! இங்கே வாராதே’ என்று பின் விளைவறிந்து
தடுத்துக் கைகாட்டித் திரும்பிச் செல்லச்
சொல்வதுபோற் காட்சியளித்ததாகக் கூறுவதும்
இக்கருத்தோடொத்ததே என்க. அது:
2‘போருழந் தெடுத்த ஆரெயில்
நெடுங்கொடி
வாரல் என்பன போல் மறித்துக்
கைகாட்ட’
என்பதாகும். (74)
வானவர், நளன்மேற் பூமாரி பொழிதல்
408. உத்தமரில் மற்றிவனை ஒப்பார் ஒருவரிலை
இத்தலத்தில் என்றிமையோர் எம்மருங்கும்-கைத்தலத்தின்
தேமாரி செய்யும் திருமலர்த்தார் வேந்தன்மேல்
பூமாரி பெய்தார் புகழ்ந்து.
(இ - ள்.) இமையோர் - தேவர்கள்,
இத்தலத்தில் உத்தமரில் இவளை ஒப்பார் ஒருவர்
இலை - இம்மண்ணுலகத்தில் சிறந்தவர்களுள்
இவனோடொத்த பண்புடையார் எவருமே இல்லை, என்று
புகழ்ந்து - என்று கூறிக்கொண்டாடி, தேமாரி
பெய்யும் திருமலர்த்தார் வேந்தன்மேல் - தேனானது
மழைபோல் பெய்கின்ற அழகிய மலர்மாலையணிந்த
நளவேந்தன்மீது, கைத்தலத்
1. தொல், பொருளியல் : 2.
2.சிலப், 13 : 189 - 90.
|