பக்கம் எண் :

மூலமும் உரையும்521

தின் பூமாரி எம்மருங்கும் பெய்தார் - தத்தம் கைகளினால் அள்ளி அள்ளி எல்லாப் பக்கங்களிலும் மலர்மாரியைப் பெய்தார்கள்.

(க - து.) உலகில் நளன் ஒருவனே உயர்ந்த பண்பாடுடையான், இவனையொப்பார் ஒருவருமில்லையென்று புகழ்ந்து தேவர்கள் தம்தம் கைகளினால் அள்ளி அள்ளி மலர் மாரி தூற்றினார்கள் என்பதாம்.

(வி - ரை.) உத்தமன் - ஆண்களில் சிறந்தவன். சிறப்பாவது தன்னுயிர்போல மன்னுயிரையும் எண்ணிப் பாதுகாக்கும் பண்புடைமையும், இன்சொற் கூறலும், ஈகையுடையனாதலும், அன்பு, நாண், கண்ணோட்டம் முதலியவற்றினையுடையனாக இருத்தலும் முதலியஅரிய செயல்கள். மற்று: வினைமாற்றுப் பொருளில் வந்தது. ஒருவரும் இலை என்பதிலுள்ள
உயர்வு சிறப்புக்குறிக்கும் உம்மை, செய்யுள் விகாரத்தால் தொக்கது. இத்தலத்தில் என அண்மைச் சுட்டாக வருதலால் விண்ணுலகத்தினும்
என்று கூறலும் பொருந்தும். எம்மருங்கும் - எல்லாப் பக்கமும். தலம் - இடம் என்னும் பொருளது. தேன்+மாரி - தேமாரி நிலைமொழி னகரம் கெட்டுப் புணர்ந்தது. நளன் அன்றலர்ந்த நாண் மலரால் தொடுக்கப்பட்ட மாலையணிதலால் மாலையிலிருந்து தேன் பெருக்கெடுத்து மழைத்தாரைபோல் வழிகின்றதென்று நளன் அணியும் மாலையேற்றங் கூறினார். தேவர்கள் எல்லா இடங்களினும் மலர்களை வாரி வாரி
இறைத்து நளன் சிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவதால் பூக்கள்
எங்கும் மழைத்தாரைபோல் சளசளவென்று விழுவதைப் ‘பூமாரி பெய்தார்’ என்றார். (75)

கலிமகன், நளனை வரம்பெற்றுக் கொள்ளுமாறு வேண்டுதல்

409. தேவியிவள் கற்புக்கும் செங்கோல் முறைமைக்கும்
பூவுலகில் ஒப்பாயார் போதுவார் - காவலனே!
மற்றென்பால் வேண்டும் வரங்கேட்டுக் கொள்ளென்றான்
முற்றன்பால் பாரளிப்பான் முன்.

(இ - ள்.) (கலியானவன்) முற்று அன்பால் பார் அளிப்பான் முன் - நிறைந்த அன்பினால் உயிர்களைப் பாதுகாக்கும் நளமன்னன் முன்னிலையில் (தோன்றி), காவலனே - நளமன்னனே!, தேவி இவள் கற்புக்கும் செம்கோல் முறைமைக்கும் - உன் மனையாளாகிய இத்தமயந்தியின் கற்பு மேம்பாட்டுக்கும் உனது ஆட்சி முறையினுக்கும், ஒப்பு ஆக பூ உலகில் போதுவார் யார் - ஈடாக