பக்கம் எண் :

524நளவெண்பா[ கலிநீங்கு காண்டம்]

குறிக்கப் பெறுவதறிக. மதுரைமாநகரை அரசுமுறை கோடாது ஆண்ட மீனாட்சியம்மையார் சிறப்பைக் குறிக்கக் குமரகுருபரர், அம்மையார் பிள்ளைத் தமிழ்க்கண்,

1‘அதிரப் பொருது கலிப்பகை ஞன்தமிழ் நீர்நா டாளாமே’

என்றருளியதும் கலியின் கொடுமையைக் குறிக்கவே என அறிக. நல்லோர்கள்,

2‘தங்குறைதீர் வுள்ளார் தளர்ந்து பிறர்க்குறூஉம்
வெங்குறை தீர்க்கிற்பார் விழுமியோர்’

என்னும் விழுமிய வுரைக்கு இலக்காக இலகுவர். நளன் செயலும் அவ்வாறு இருப்பதை ஓர்க. நல்லோர் நல்லனவற்றையே நாடிப் பிறர்நலத்தையே விரும்புவர் என்பதற்கிலக்காக அயோத்தியேந்தல் இராமன், தன் தந்தை தெய்வ வடிவில் இலங்கைக்குப் போந்து வரங்கொடுக்க எண்ணி, நீ விரும்பிய தொன்றைக் கேளென வுரைத்த போது, அவன் பிறவற்றை எதுவும் வேண்டாது கைகேயிபால்கொண்ட வெறுப்பும், பரதன்பால் வைத்த மனக்கசப்பும் நீங்கி, அவ்விருவரும் எனக்குத் தாயும் தம்பியும் ஆகும் வரத்தையே தருகவென வேண்டி நின்றதும், இப்பயன் கருதாப் பரந்த மனநிலையை உணர்த்துதல் அறிக. அதைக் குறிக்கும் செய்யுள் கருத்துக்குரியதாதலான், ஈண்டு அதைக் குறிக்கின்றாம்.

3‘ஆயி னும்உனக் கமைந்ததொன் றறையென அழகன்
தீய ளென்றுநீ துறந்தஎன் தெய்வமும் மகனும்
தாயும் தம்பியும் ஆம்வரம் தருகெனத் தாழ்ந்தான்’

என்பது. இவ்வாறு நளன் செயலும் என்பதை உணர்க. (77)

கலிமகன், நளன் விரும்பியவாறே வரமளித்தல்

411. என்காலத் துன்சரிதம் கேட்டாரை யானடையேன்
மின்கால் அயில்வேலாய் மெய்யென்று - நன்காவி
மட்டிறைக்கும் சோலை வளநாடன் முன்னின்று
கட்டுரைத்துப் போனான் கலி.

(இ - ள்.) கலி - கலியானவன், (இவ்வாறு கூறிய நளனை நோக்கி) மின்கால் அயில்வேலாய்-ஒளிவிட்டெறிக்கின்ற கூர்மை

1. மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் : 32. 2. நன்னெறி : 10.
3. கம்பராமா, உயுத்த, மீட்சி : 129.