பக்கம் எண் :

மூலமும் உரையும்529

(இ - ள்.) முற்று ஆம்பல் தேன்நீர் அளித்து - மலரும் பருவ அல்லி அரும்புகள் மலர்ந்து தேனாகிய நீரை ஒழுக்கி, அருகு செம் நெல் கதிர்விளைக்கும் - தன் பக்கத்திலுள்ள செந்நெற் பயிர்களை வளர்த்து கதிர்கள் கொண்டு விளையச்செய்கின்ற, மாநீர் நிடதத்தார் மன் - மிக்க நீர்வளம் பொருந்திய நிடதநாட்டுக்கு அரசனான நளன், வில்தானை முன்செல்ல வேல்வேந்தர் பின்செல்ல - விற்படை கொண்ட படைவீரர்கள் தனக்கு முன்புறமாகப் போகவும் வேற்படை ஏந்திய அரசர்கள் தனக்குப் பின்புறமாகத் (தொடர்ந்து) வரவும், பொன் தேர்மேல் தேவியொடும் போயினான் - பொன்னாற் செய்த தேரின்மேலேறிக்கொண்டு தன் மனையாளோடும் (தன் நகர்நோக்கிப்) புறப்பட்டுச் சென்றான்.

(க - து.) நளமன்னனானவன், தனக்கு முன்பு வில் வீரர்கள் போகவும், தனக்குப் பின்பு வேல்வேந்தர்கள் தொடர்ந்துவரவும், பொன்னானியன்ற தேரில் தன் மனையாளோடும் ஏறிக்கொண்டு தன் நகர்நோக்கிப் புறப்பட்டுச் சென்றான் என்பதாம்.

(வி - ரை.) வில்+தானை - விற்றானையெனப் புணர்ந்தது. விகாரப் புணர்ச்சி. இது உருபும் பயனும் உடன் தொக்கதொகை. எறிபடையினும் விடுபடை சிறந்ததாகலின், அதனை முற்கூறினார். அரசர்க்குரிய உறுப்புக்கள் ஆறனுள், படையே முதன்மைமயானது, அரசர்கட்குப் பாதுகாப்பாக இருத்தலின். வள்ளுவரும் அரசர்கட்கு வகுத்த உறுப்பு ஆறனுள்,

1‘படைகுடி கூழமைச்சு நட்பரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு’

என, முதற்கண் படையைவைத் தோதினமையும் அறிக. அரசர்கள் புறப்படுங்கால் அவர்தம் உரிமைச் சின்னங்களை அனுப்பிப் பின்னரே செல்லுதல் அரசர் மரபாகக்கொள்வது பண்டுதொட்ட மரபு.

2‘அரசர்தம் உரிமை போக்கி அதன்பின்னே செல்வர்’

எனத் திருத்தக்கதேவர் சிந்தாமணியினும்,

3‘சீரை சுற்றித் திருமகள் பின்செல

மூரி விற்கை இளையவன் முன்செல

1. திருக்குறள் : 381. 2. சீவகசிந்,
3. கம்பராமா, நகர்நீங்கு : 234.
ந. - 34.