|
(இ - ள்.) (இவ்வாறு நிடதநாட்டுக்குச்
செல்லுங்கால் தமயந்தி நளனை நோக்கி) தானவரை
வெல்ல தரித்த நெடு வை வேலாய் - அரக்க நெறியினரை
வெல்வதற்குக் கொண்ட நீண்ட கூர்மை பொருந்திய
வேற்படையையுடைய வேந்தே!, ஏனைநெறி தூரம் இனி
எத்தனையோ - (இன்னும் நம் நகர் செல்வதற்குக்
கடந்து செல்லவேண்டிய) வழித் தூரம்
எவ்வளவிருக்கின்றதோ (என்று வினவினாள்), (அதற்கு
நளன்) மானே கேள் - மான் போன்றவளே கேட்பாயாக,
இந்த மலைகடந்து ஏழுமலைக்கு அப்புறம் - இதோ நம்
கண்முன் தோன்றுகின்ற இந்தப் பெரிய மலையைத்
தாண்டி அதற்கப்பாலுள்ள ஏழுமலைகளையும் கடந்து அதன்
பின்னுள்ள இடத்தே, மாவிந்தம் எனும் நம் பதிதான்
மிக்கு - மாவிந்தமாநகரமென்னும் நம் நகரம்
சிறந்து விளங்குகின்றது (விரைவில் காண்போம்
என்றான்).
(க - து.) நளனைத் தமயந்தி நோக்கி,
‘வேந்தே ! நம் நகர் இன்னும் எவ்வளவு தூரம் உள்ளது’
என்று வினவினாள். அதற்கவன் ‘மானே ! இதோ
தெரிகின்ற மலைக்கு அப்புறம் ஏழுமைலைகள் உள்ளன;
அவைகளைக் கடந்தால் அப்புறம் இருப்பது நம் நகரமே’
என்றான் என்பதாம்.
(வி - ரை.) தானவர் - அரக்க
நெறியினர். அரக்க நெறியாவது எவ்வுயிருக்கும்
இரக்கங்கொள்ளாத வல்லென்ற நெஞ்சத் தன்மை.
1‘இழக்கமென் றொருபொருள் இலாத
நெஞ்சினர்
அரக்கர்’
என்றார் கம்பரும். இத்தகைய
கொலையிற் கொடியாரை வேந்தர் ஒறுத்தல்
செங்கோன் முறைமை. அம்முறையை நிறுவ வேற்படை
தாங்கியவனாகலான், ‘தரித்த நெடு வைவேலா’ எனத்
தமயந்தி விளித்தாள். பெண்மை மனம் மிக்க
மென்மையுடையது; எதினும் விரைவில் இளகும்
தன்மைத்து; துன்பத்தினும் இன்பத்தினும்
சார்ந்ததன் வண்ணமாய் ஆகும் தன்மையது; ஆதலால்
எதையும் தாங்கும் மதுகை இன்று. அத்தன்மை வாய்ந்த
பெண்ணருங்கலமாகிய தமயந்திக்கு வழிச்செலவு
போகப்போகத் தொலையாத பெருவழியாகத்
தோன்றுகின்றது. உடனே தன் காதற் கணவனை நோக்கி,
‘அரசே ! ஏனைநெறி தூரம் இனி எத்தனையோ’ என
மறுக்கங்கொண்டு கேட்டாள் ; அதற்குப் பெண்
மனநிலையறிந்த நளன், இவ்வளவு தூரம் இருக்
1. கம்பராமா, ஆரணிய, அகத்திய: 12.
|