பக்கம் எண் :

மூலமும் உரையும்7

முருகவேள்

5. 1நீல நெடுங்கொண்மூ நெற்றி நிழல்நாறிக்
காலை இருள்சீக்கும் காய்கதிர்போல் - சோலை
மணித்தோகை மேல்தோன்றி மாக்கடல்சூர் வெண்றோன்
அணிச்சே வடியெம் அரண்.

(இ - ள்.) நீல நெடும் கொண்மூ - நீலநிறம் பொருந்திய நீண்ட மேகத்தின், நெற்றி நிழல் நாறி - உச்சியின்கண் ஒளியை வீசி, காலை இருள் சீக்கும் காய்கதிர்போல் - விடியற்காலைப் பொழுதில் இருளை ஓட்டுகின்ற ஒளியெறிக்கின்ற சூரியன்போல, சோலை மணித்தோகை மேல் தோன்றி - பொழிலின்கண் வாழ்கின்ற அழகிய மயிலின்மேல் இருந்து காட்சியளித்து, மாகடல் சூர்வென்றோன் - கடலிடத்து மாமரமாக நின்ற சூரனை வென்றவனாகிய முருகவேளின், அணி சேவடி எம் அரண் - அழகிய சிவந்த திருவடிகள் எமக்குப் பாதுகாப்பாக இருக்கும். (ஆகவே, அவ்வடிகளை வணங்குவாம்.)

(க - து.) முருகவேளின் திருவடிகள் எமக்குப் பாதுகாப்பாகும் ; அதனை வணங்குவோம்.

(வி - ரை.) கொண்மூ - மேகம். நீர்கொண்டுள்ளது என்பது பொருள். முருகவேள் மயிலின்கண் எழுந்தருளி வரும் காட்சி, சூல்கொண்ட மேகத்தின் நடுவில் தோன்றிக் காலைப்பொழுதில் இருளை ஓட்டும் இளஞாயிறுபோல தோன்றுகின்ற தென்பாராய் ‘காய் கதிர்போல்’ என்றார். இக் கருத்தை யொப்பவே,

2‘உலகம் உவப்ப வலனேர்பு திரிதரு
பலர்புகழ் ஞாயிறு கடற்கண் டாஅங்கு
ஓவற இமைக்கும் சேண்விளங் கவிரொளி’

என, நக்கீரரும்,

3‘உததி இடை கடவுமர கதவருண குலதுரக’

என, அருணகிரிநாதரும் அருளுமாற்றால் தெளிக.

தோன்றி-தோன்றுவோன் என்று பெயராகக் கொள்ளினும் அமையும். அன்றித் தோன்றியென வினையெச்சமாகக் கொண்

1. இப் பாடல் சில பதிப்புகளில் காணப் பெறவில்லை.
2. திருமுருகாற்றுப்படை: 1-3. 3. திருவகுப்பு: 1.