பக்கம் எண் :

97

முறையும் மழையில் நன்றாக நனைந்து கிழிந்துபோம், அரிய குருதிவாரம்
தனக்குக் குறைபடாது இடர்வரும் வீரியம் போம் - நன்மைக்கு ஆகாத
செவ்வாய்க்கிழமையில் மிகுந்த துன்பம் உண்டாகும; ஆண்மையும் நீங்கும்,
புந்தியில் கொஞ்ச நாளில் கிழியும்; வெற்றிபோம் - புதன்கிழமையிற்
சிலநாளிலே கிழிந்துவிடும்; வெற்றியும் நீங்கும், குருவாரமதில் அணிந்தால்
மறைபடாத அழகு உண்டு; மேன்மேலும் நல்லஆடை வரும் -
வியாழக்கிழமைகளில் உடுத்தினால் நீங்காத அழகு உண்டாகும்; மேலும்
மேலும் நல்ல ஆடைகள் கிடைக்கும், சுக்கிரற்கோ வாழ்வு உண்டு
திருஉண்டு - வெள்ளிக்கிழமையில் உடுத்தால் நல்வாழ்வும் செல்வமும்
உண்டாகும், பொல்லாத சனியற்கு வாழ்வுபோம், மரணம் உண்டாம் - தீய
சனிக்கிழமையில் உடுத்தினால் வாழ்வு சிதையும்; இறப்பும் உண்டாகும்.

           62. சகுனம் - 1

சொல்லரிய கருடன்வா னரம்அரவம் மூஞ்சிறு
     சூகரம் கீரி கலைமான்
  துய்யபா ரத்வாசம் அட்டைஎலி புன்கூகை
     சொற்பெருக மருவும் ஆந்தை
வெல்லரிய கரடிகாட் டான்பூனை புலிமேல்
     விளங்கும்இரு நா உடும்பு
  மிகவுரைசெய் இவையெலாம் வலம்இருந் திடமாகில்
     வெற்றியுண் டதிக நலம்ஆம்;
ஒல்லையின் வழிப்பயணம் ஆகுமவர் தலைதாக்கல்,
     ஒருதுடை யிருத்தல், பற்றல்,
  ஒருதும்மல், ஆணையிடல், இருமல், போ கேலென்ன
     உபசுருதி சொல்இ வையெலாம்
அல்லல்தரும் நல்லஅல என்பர்; முதி யோர்பரவும்
     அமலனே! அருமை மதவேள்
  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
     அறப்பளீ சுரதே வனே!