விதேகநாட்டரசி
(தத்திதாந்த நாமம்). நளாயினி - நளன் மகள். ஆர் அழல்
- நிறைந்த தீ. அருமை + அழல், ஆரழல் எனக் கொண்டால் (பொறுத்தற்கு)
அரிய தீ எனக் கொள்ளவேண்டும்.
61. கோடி
உடுக்கும் நாள்
கறைபடா தொளிசேரும் ஆதிவா ரந்தனிற்
கட்டலாம் புதிய சீலை;
கலைமதிக் காகாது; பலகாலும் மழையினிற்
கடிதுநனை வுற்றொ ழிதரும்;
குறைபடா திடர்வரும்; வீரியம்போம், அரிய
குருதிவா ரந்த னக்கு;
கொஞ்சநா ளிற்கிழியும், வெற்றிபோம் புந்தியில்;
குருவார மதில ணிந்தால்,
மறைபடா தழகுண்டு, மேன்மேலும் நல்லாடை
வரும்; இனிய சுக்கி ரற்கோ
வாழ்வுண்டு, திருவுண்டு, பொல்லாத சனியற்கு
வாழ்வுபோம், மரணம் உண்டாம்;
அறைகின்ற வேதாக மத்தின்வடி வாய்விளங்
கமலனே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
|
(இ-ள்.) அறைகின்ற
வேதஆகமத்தின் வடிவாய் விளங்கு அமலனே
- கூறப்படுகின்ற மறைவடிவாகவும் ஆகமவடிவாகவும் விளங்கும் தூயவனே!,
அருமை .......... தேவனே!, ஆதிவாரந்தனிற் புதியசீலை கட்டலாம் -
ஞாயிற்றுக்கிழமையில் புதிய ஆடை உடுக்கலாம். (அவ்வாறு உடுத்தால்)
கறைபடாது ஒளிசேரும் - (ஆடையிற்) கறை பிடிக்காது; தூயதாக ஒளிதரும்,
கலைமதிக்கு ஆகாது - கலைகளையுடைய திங்களுக்குத் தகாது,
(கட்டினால்), பலகாலும் மழையினில் கடிது நனைவுற்று ஒழிதரும் - பல |