நன்னதி
படிந்திடுவ தென்னஆர் அழல்மூழ்கி
நாயகனை மேவு தயவாள்,
நானிலம் புகழ்சாலி, பேர்பெறு நளாயினி,
நளினமலர் மேல்வை தேகி
அன்னமென வருசந்த்ர மதிதுரோ பதையென்பர்
ஆதியே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
|
(இ-ள்.) ஆதியே
- முதல்வனே!, அருமை.......தேவனே!, தன்கணவன்
உருவமாய்த் தற்புணர வந்தோன் தனக்கு இணங்காத நிறையாள் நானிலம்
புகழ்சாலி - தன்னுடைய கணவனின் வடிவத்துடன் தன்னைக் கூட
வந்தவனுக்குச் சம்மதியாத கற்புடையாள் உலகம் புகழும் அருந்ததி,
தழல்கதிர் எழாமலும் பொழுது விடியாமலும் சாபம் கொடுத்த செயலாள்
பேர்பெறுநளாயினி - கதிரவன் தோன்றாமலும் இரவு கழியாமலும் சாபம்
கொடுத்த செய்கையினாள் புகழ்பெற்ற நளாயினி, மன்னிவளர் அனல்மூழ்கி
உலகு அறியவே தனது மகிழ்நனைச் சேர்ந்த பரிவாள் நளினமலர்மேல்
வைதேகி - பொருந்தி வளர்ந்த தீயிற்புகுந்து உலகம் அறியுமாறு தன்
கணவனை அடைந்த அன்பினாள் தாமரை மலர்மேல் இருக்கும்
இலக்குமியின் அமிசமான சீதை, மைந்தனைச் சுடவந்த இறைவன் தடிந்த
வடிவாள் மாலையான கனிவாள் அன்னம் எனவரு சந்திரமதி - மகனைத்
தீயிலிட வந்த(போது) தன் கணவன் வெட்டிய கூரிய வாள் (மலர்)
மாலையான கனிவுடையவள் அன்னம் போன்ற நடையையுடைய சந்திரமதி,
நல்நதி படிந்திடுவது என்னஆர் அழல்மூழ்கி நாயகனை மேவுதயவாள்
துரோபதை - நல்ல ஆற்றிலே மூழ்குவதுபோல நிறைந்த தீயிலே முழுகித்
தன் கணவனைக் கூடும் அன்புடையாள் திரௌபதி, என்பர் - என்று
(அறிஞர்) கூறுவர்.
(வி-ரை.)
பரிவு,
தயவு கனிவு - என்பவை அன்பைக் குறிக்க வந்தன.
வடி - கூர்மை. தடிதல் - வெட்டுதல். வைதேகி -
|