அவிநாசியும் திருப்பேரூரும்
பெருமையுடைய திருவெண்காடும்
திருச்செங்கோடும் திருக்காளத்தியும் இடமாகக் கொண்ட முதல்வனே!, சபை
மெச்சிடப் பேசுவோர் பதின்மரில் ஒருத்தர் - அவை புகழும்படி பேசுவோர்
பத்துக்கு ஒருவர், பாடுவோர் நூற்றில் ஒருவர் - (இனிமையாகப்) பாடுவோர்
நூற்றுக்கு ஒருவர், விதிதப்பாது பாடி பிரசங்கம் இடுவோர் பார்மீதில்
ஆயிரத்து ஒருவர் - முறை தவறாமற் பாடிச் சொற்பொழிவு செய்வோர்
உலகில் ஆயிரத்தில் ஒருவர், இதன் அருமை அறிகுவோர் பதினாயிரத்து
ஒருவர் - இந்தச் சொற்பொழிவின் சிறப்பைத் தெரிந்தவர் பதினாயிரவரில்
ஒருவர், இதை அறிந்து இதயம் மகிழ்வாய் ஈகின்ற பேர் - இதன்
பெருமையை உணர்ந்து மனமகிழ்வுடன் பெருளளிப்போர், புவியிலே
அருமையாகவே இலக்கத்திலே ஒருவர் ஆம் - உலகில் அருமையாக
இலட்சத்துக்கு ஒருவர் ஆவர், துதிபெருக வரும் மூன்று காலமும் அறிந்த
மெய்த்தூயர் கோடியில் ஒருவர்ஆம் - புகழ் மிக வரும் முக்காலமும்
உணர்ந்த உண்மையான் நல்லோர் கோடி மக்களில் ஒருவர் ஆவர்.
(வி-ரை.) தொன்மை
+ உலகு : தொல்லுலகு. ஏகம் + ஆம்பரம் :
ஒற்றை மாமரம். (காஞ்சிபுரம் ஒற்றை மாமரத்தைத்தல விருட்சமாக வுடையது.)
60.
கற்பு மேம்பாடு
தன்கணவன்
உருவமாய்த் தற்புணர வந்தோன்
தனக்கிணங் காத நிறையாள்,
தழற்கதிர் எழாமலும் பொழுதுவிடி யாமலும்
சாபம் கொடுத்த செயலாள்,
மன்னிவளர் அழல்மூழ்கி உலகறிய வேதனது
மகிழ்நனைச் சேர்ந்த பரிவாள்,
மைந்தனைச் சுடவந்த இறைவன் தடிந்தவடி
வாள்மாலை யான கனிவாள்,
|
|