பக்கம் எண் :

107

     (வி-ரை.) சனியின் நிறம் கருமையாகையால், ‘மங்குல் நிகர் சனி'
என்றார். அகம் + கை - அங்கை.

     (க-து.)
விருந்து உண்ணவும் செய்யவும் ஞாயிறு, செவ்வாய், வியாழன்
தகாதவை; மற்றவை நலமானவை.

            69. பூப்பு வாரம்

அருக்கனுக் கதிரோகி யாவள்;நற் சோமனுக்
     கானகற் புடைய ளாவாள்;
  அங்கார கற்குவெகு துக்கியா வாள்;புந்தி
     அளவில்பைங் குழவி பெறுவாள்;
திருத்தகு வியாழத்தின் மிக்கசம் பத்தினொடு
     சிறுவரைப் பெற்றெ டுப்பாள்;
  சீருடைய பார்க்கவற் கதிபோக வதியுமாம்;
     திருவுமுண் டாயி ருப்பாள்;
கருத்தழிந்து எழில்குன்றி வறுமைகொண்டு அலைகுவாள்
     காரிவா ரத்தி லாகில்;
  களபமுலை மடமாதர் புட்பவதி யாம்வார
     காலபலன் என்று ரைசெய்வார்;
அருத்தியுடன் எளியேனை ஆட்கொண்ட சோதியே!
     அண்ணலே! அருமை மதவேள்
  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
     அறப்பளீ சுரதே வனே!


     (இ-ள்.)
அருத்தியுடன் எளியேனை ஆட்கொண்ட சோதியே -
அன்புடன் எளிய என்னை அடிமையாக ஏற்ற பேரொளியே!; அருக்கனுக்கு
அதிரோகி ஆவாள் - ஞாயிற்றுக் கிழமையில் மிகுநோயுடையவள் ஆவள்,
நல்சோமனுக்கு ஆனகற்பு உடையவள் ஆவாள் - நல்ல திங்களில்
மிகுதியான கற்புடையவள் ஆவாள், அங்காரகற்கு வெகு துக்கி ஆவாள் -
செவ்வாயில் மிகுந்த வருத்தமுடையவள் ஆவாள்,