பக்கம் எண் :

108

புந்தியில் அளவுஇல் பைங்குழவி பெறுவாள் - புதனில் மிகுதியான
குழந்தைகளைப் பெறுவாள், திருத்தகு வியாழத்தில் மிக்க சம்பத்தினொடு
சிறுவரைப் பெற்றெடுப்பாள் - சிறப்புற்ற வியாழனில் அளவற்ற செல்வத்துடன்
மக்கட்பேறும் உடையவளாயிருப்பாள், சீருடைய பார்க்கவற்கு அதிபோக
வதியும்ஆம்; திருவும் உண்டாயிருப்பாள் - புகழ்மிக்க வெள்ளியில் மிகவும்
இன்பமுடையவளும் செல்வமுடையவளும் ஆவாள், காரிவாரத்தில் ஆகில்
கருத்து அழிந்து எழில்குன்றி வறுமைகொண்டு அலைகுவாள் -
சனிக்கிழமையில் ஆனால் மனங்கெட்டு, அழகிழந்து, வறுமையுடன் திரிவாள்,
களபமுலை மாதர் புட்பவதிஆம் வார காலபலன் என்று உரைசெய்வார் -
கலவைச் சந்தனம் பூசிய கொங்கையையுடைய பெண்கள் பூப்படைகிற
வாரகால பலன் (இவை) எனக் (கற்றவர்) கூறுவர்.


     (க-து.)
பெண்கள் ஞாயிறு, செவ்வாய், சனிக்கிழமைகளில் பூப்படைதல்
தீமை; மற்றக் கிழமைகள் நலம்.

           70. பூப்பு இலக்கினம்

வறுமைதப் பாதுவரும் மேடத்தில்; இடபத்தில்
     மாறாது விபசா ரிஆம்;
  வாழ்வுண்டு போகமுண் டாகும்மிது னம்; கடகம்
     வலிதினிற் பிறரை அணைவாள்;
சிறுமைசெயும் மிடிசேர்வள் மிருகேந் திரற்கெனில்
     சீர்பெறுவள் கன்னி யென்னில்;
  செட்டுடையள் துலையெனில்; பிணியால் மெலிந்திடுவள்
     தேளினுக் குத்; தனுசுஎனில்
நெறிசிதைவள், பூருவத் தபரநெறி உடையளாம்;
     நீள்மகரம் மான மிலளாம்;
  நிறைபோக வதிகும்பம் எனில்; மீனம் என்னிலோ
     நெடியபே ரறிவு டையளாம்;