அறிவாளர்
மடமாதர் தமையறி இராசிபலன்
அதுவென்பர்; அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
|
(இ-ள்.) அருமை ....... தேவனே!, மேடத்தில்
வறுமை தப்பாது வரும்
- மேடஇராசியில் (பூப்படைந்தால்) தவறாமல் வறுமை உண்டாகும், இடபத்தில்
மாறாது விபசாரி ஆம் - இடபராசியில் தவறாமல் தீய ஒழுக்கமுடையளாவள்,
மிதுனம் வாழ்வு உண்டு, போகம் உண்டாகும் - மிதுனத்தில் வாழ்வும்
இன்பமும் அடைவாள்; கடகம் வலிதினில் பிறரை அணைவாள் - கடகத்தில்
தானே (கணவன் அல்லாத) மற்றவரைத் தழுவுவாள், மிருகேந்திரற்கு எனில்
சிறுமை செயும் மிடிசேர்வாள் - சிங்கத்தில் இழிவுதரும் வறுமையுடையளாவள்,
கன்னி என்னில் சீர்பெறுவள் - கன்னியில் ஆயின் புகழ்பெறுவாள்,
துலையெனில் செட்டுடையள் - துலையாயின் சிக்கனம் உடையளாயிருப்பாள்,
தேளினுக்குப் பிணியால் மெலிந்திடுவள் - விருச்சிகத்தில் நோயால்
இளைத்திடுவாள், தனுசுஎனில் நெறி சிதைவள், பூருவத்து அபரநெறி
உடையள்ஆம் - தனுசில் ஆனால் ஒழுக்கம் கெடுவாள், முன்னும் பின்னுந்
தீயஒழுக்கம் உடையவளாகவே யிருப்பாள், நீள்மகரம் மானம்இலள்ஆம்
- பெரிய மகரத்தில் பெருமை இழந்தவள் ஆவாள், கும்பம் எனில்
நிறைபோகவதி - கும்பத்தில் நிறைந்த இன்பம் உடையவள் ஆவாள், மீனம்
என்னிலோ நெடிய பேரறிவு உடையள்ஆம் - மீனத்தில் ஆனால் மிகுந்த
பேரறிவு உடையவள் ஆவாள், மடமாதர் தமை அறிவாளர் அறி இராசிபலன்
அதுஎன்பர் - இளமங்கையரை அறிவாளர் அறிவதற்குரிய இலக்கின பலன்
இது என்று கூறுவர்.
(வி-ரை.) மிருகங்களில் தலைமைபெற்றது
சிங்கம். பூருவம் - முன்.
அபரம் - பின்.
(க-து) பெண்கள் மேடம், இடபம்,
கடகம், சிங்கம், விருச்சிகம், தனுசு,
மகரம் ஆகிய இராசிகளிற் பூப்படைதல் தீது : மற்றவை நலம். |
|
|
|