ஆகும்,
பூவில்இது சூழ்தல் சாகத்தீவம் - உலகில் இதனைச் சூழ்வது
சாகத்தீவு, இங்கு இதைப் போர்ப்பது திருப்பாற் கடல் - இவ்வுலகில்
சாகத்தீவை வளைவது திருப்பாற் கடல், போத அதுசூழ்தல் சான்மலி
தீவம்ஆம் - நன்றாக அதனைச் சூழ்வது சான்மலித் தீவு, அப்பாலும்
தயிர்ப்புணரி - அதற்கப்புறம் (சூழ்வது) தயிர்க்கடல், அப்பால் ஆவல்உறு
புட்கரத்தீவு ஆம் - அதற்கப்புறம் (சூழ்வது) விருப்பம் ஊட்டும் புட்கரத்தீவு,
இதைச் சூழ்வது அரும்புனற்று - இதனைச் சூழ்வது அரிய நன்னீர்க்கடல்.
(வி-ரை.) நாவல்அம்
தீவு - நாவல் மரங்கள் நிறைந்த தீவு. இலவுஅம்
தீவு - இலவ மரங்கள் நிறைவான தீவு. குசம் - தர்ப்பை; தர்ப்பைத் தீவு.
கிரவுஞ்சம் - அன்றில் (ஒருவகைப் பறவை) : கிரவுஞ்சப் பறவையையுடைய
தீவு. சாகம் - தேக்கு : தேக்குமரத் தீவு. சான்மலி என்பதும் இலவமரமே.
புட்கரம் - பருந்து. நாவல், இலவு, குசம், கிரவுஞ்சம், சாகம், சான்மலி,
புட்கரம் : இவற்றை மிகுதியாகவோ சிறப்பாகவோ உடைய ஏழுதீவுகள்.
அவ்வாறே கருங்கடல், கழைச்சாற்றுக் கடல், கட்கடல் (மது - கள்),
நெய்க்கடல், பாற்கடல், தயிர்க்கடல், நறுநீர்க் கடல் என ஏழு கடல்கள்
இவ்வாறு புராணம் கூறும்.
72.
மாணிக்கங்கள்
சுழிசுத்த மாயிருந்ததிலும் படைக்கான
துரகம்ஓர் மாணிக் கம்ஆம்;
சூழ்புவிக் கரசனாய் அதிலேவி வேகமுள
துரையுமோர் மாணிக் கம்ஆம்;
பழுதற்ற அதிரூப வதியுமாய்க் கற்புடைய
பாவையோர் மாணிக் கம்ஆம்;
பலகலைகள் கற்றறி அடக்கமுள பாவலன்
பார்க்கிலோர் மாணிக் கம்ஆம்;
ஒழிவற்ற செல்வனாய் அதிலே விவேகியாம்
உசிதனோர் மாணிக் கம்ஆம்;
உத்தம குலத்துதித் ததிலுமோ மெய்ஞ்ஞானம்
உடையனோர் மாணிக் கம்ஆம்;
|
|
|
|
|