பக்கம் எண் :

112

அழிவற்ற வேதாக மத்தின்வடி வாய்விளங்
     கமலனே! அருமை மதவேள்
  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
     அறப்பளீ சுரதே வனே!


     (இ-ள்.)
அழிவுஅற்ற வேதஆகமத்தின் வடிவாய் விளங்கு அமலனே
- கெடுதல் இல்லாத மறைவடிவாயும் ஆகம வடிவாயும் விளங்கும் தூயவனே!,
அருமை ....... தேவனே!, சுழி சுத்தமாய் இருந்து, அதிலும் படைக்கு ஆன
துரகம் ஓர் மாணிக்கம் ஆம் - தூய சுழிகளுடன் போருக்கும் பயன்படும்
குதிரை ஒரு மாணிக்கம் போன்றது, சூழ்புவிக்கு அரசனாய் அதிலே விவேகம்
உளதுரையும் ஓர் மாணிக்கம் ஆம் - சூழும் உலகிற்கு மன்னனாகி மேலும்
அறிவும் உடைய தலைவன் ஒரு மாணிக்கம் போன்றவன், பழுதுஅற்ற
அதிரூப வதியுமாய்க் கற்புஉடைய பாவை ஓர் மாணிக்கம் ஆம் - குற்றமற்ற
சிறந்த அழகும் கற்பும் உடைய மங்கை ஒரு மாணிக்கம் போன்றவள், பல
கலைகள் கற்றுஅறி அடக்கம்உள பாவலன் பார்க்கில் ஓர் மாணிக்கம் ஆம்
- பலவகையான கலைகளைப் படித்தறிந்து, அடக்கமாயிருக்கும் பாவலன்
ஆராயின் ஒரு மாணிக்கம் போன்றவன், ஒழிவுஅற்ற செல்வனாய் அதிலே
தியாகியாம் உசிதன்ஓர் மாணிக்கம் ஆம் - அளவில்லாத செல்வத்துடன்
மேலுங் கொடையாளியுமான உயர்ந்தோன் ஒரு மாணிக்கம் போன்றவன்,
உத்தம குலத்து உதித்து அதிலும் மெய்ஞ்ஞானம் உடையன் ஓர் மாணிக்கம்
ஆம் - நல்ல குடியிற் பிறந்து மேலும் மெய்யறிவும் உடையவன் ஒரு
மாணிக்கம் போன்றவன்.

      73. உண்டியிலையும் முறையும்

வாழையிலை புன்னைபுர சுடன்நற் குருக்கத்தி
     மாப்பலாத் தெங்கு பன்னீர்
  மாசிலமு துண்ணலாம்; உண்ணாத வோ அரசு
     வனசம் செழும்பா டலம்