பக்கம் எண் :

114

     (வி-ரை.) வனசம் - தாமரையிலை. செழும்பாடலம் - வளமிக்க பாதிரி.
ஏரண்ட பத்திரம் - ஆமணக்கு இலை. இச்சில் இலை - இத்தியிலை.
சாதங்கள் பல : தயிர்ச்சோறு, புளிச்சோறு, சரக்கரைப்பொங்கல்,
வெண்பொங்கல் முதலானவை. பருகுதல் : நீர் முதலிய குடிவகைகளுக்கே
வரும்; உணவுக்குக் கூறுதல். மரபு வழுவமைதி. ‘மிகினும் குறையினும் நோய்
செய்யும்' என்னும் வள்ளுவர் வாய்மொழி கருதி, ‘சற்றுண்டல் மெத்தவூண்'
கெடுதி யென்றார். இச் செய்யுளில் இந்நூலாசிரியரை ஆதரவுசெய்த
மதவேளின் குலம் ‘வேளாளர் குலும்' என அறியப்படுகிறது.

        74. கவிஞர் வறுமை

எழுதப் படிக்கவகை தெரியாத மூடனை
     இணையிலாச் சேடன் என்றும்,
  ஈவதில் லாதகன லோபியைச் சபையதனில்
     இணையிலாக் கர்ணன் என்றும்,
அழகற்ற வெகுகோர ரூபத்தை யுடையோனை
     அதிவடி மாரன் என்றும்,
  ஆயுதம் எடுக்கவுந் தெரியாத பேடிதனை
     ஆண்மைமிகு விசயன் என்றும்,
முழுவதும் பொய்சொல்லி அலைகின்ற வஞ்சகனை
     மொழிஅரிச் சந்த்ர னென்றும்,
  மூதுலகில் இவ்வணம் சொல்லியே கவிராசர்
     முறையின்றி ஏற்ப தென்னோ?
அழல்என உதித்துவரு விடம்உண்ட கண்டனே!
     அமலனே! அருமை மதவேள்!
  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
     அறப்பளீ சுரதே வனே!


     (இ-ள்.)
அழல்என உதித்துவரு விடம்உண்ட கண்டனே
-நெருப்பைப்போலத் தோன்றி வந்த நஞ்சுண்ட கழுத்தையுடையவனே!,
அமலனே - குற்றம் அற்றவனே!, அருமை ........ தேவனே!, எழுதப்படிக்க
வகைதெரியாத