பக்கம் எண் :

115

மூடனை இணைஇலாச் சேடன் என்றும் - எழுதவும் படிக்கவும் வழியறியாத
பேதையை ஒப்பற்ற ஆதிசேடன் என்றும், ஈவது இல்லாத கனலோபியைச்
சபையதனில் இணைஇலாக் கர்ணன் என்றும் - கொடுத்தறியாத பெரிய
அழுக்கனை அவையிலே ஒப்பற்ற கொடையிற் சிறந்த கர்ணன் என்றும்,
அழகு அற்ற வெகு கோரரூபத்தை உடையோனை அதிவடிவ மாரன்
என்றும் - அழகு இல்லாத மிகுந்த அருவருப்பான உருவமுடையவனைப்
பேரழகுடைய காமன் என்றும், ஆயுதம் எடுக்கவும் தெரியாத பேடிதனை
ஆண்மைமிகு விசயன் என்றும் - படையேந்தவும் பழகாத
ஆண்மையற்றவனை வீரத்திற் சிற்ந்த விசயன் என்றும், முழுவதும்
பொய்சொல்லி அலைகின்ற வஞ்சகனை மொழி அரிச்சந்திரன் என்றும் -
முற்றிலும் பொய்புகன்று திரியும் வஞ்சகனைச் சொல்லில் அரிச்சந்திரன்
என்றும், இவ்வணம் மூதுலகில் கவிராசர் சொல்லியே முறையின்றி ஏற்பது
என்னோ - இவ்வாறு பழைமையான இந்த உலகத்திற் பாவலர்கள் புகன்று
தகுதியின்றி இரப்பது என்ன காரணமோ?


     (வி-ரை.)
ஆதிசேடன் கல்வியிற் சிறந்தவன். முதுமை + உலகு -
மூதுலகு.


     (க-து.)
முற்காலத்தில் வறுமை மிகவும் கொடியதாகையாற் புலவர்கள்
ஒருவனுக்கு ‘இல்லாத சொல்லிப்' புகழ்தல் இயற்கையாக இருந்தது.

           75. கவிஞன்

தெள்ளமிர்த தாரையென மதுரம் கதித்தபைந்
     தேன்மடை திறந்த தெனவே
  செப்புமுத் தமிழினொடு நாற்கவிதை நாற்பொருள்
     தெரிந்துரைசெய் திறமை யுடனே
விள்ளரிய காவியத் துட்பொருள் அலங்காரம்
     விரிவிலக் கணவி கற்பம்
  வேறுமுள தொன்னூல் வழக்கும்உல கத்தியல்பும்
     மிக்கப்ர பந்த வண்மை