பக்கம் எண் :

116

உள்ளவெல் லாமறிந் தலையடங் குங்கடலை
     யொத்ததிக சபைகண் டபோ
  தோங்கலை யொலிக்கின்ற கடல்போற்ப்ர சங்கம
     துரைப்பவன் கவிஞ னாகும்!
அள்ளிவிடம் உண்டகனி வாயனே! நேயனே!
     அமலனே! அருமை மதவேள்
  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
     அறப்பளீ சுரதே வனே!


     (இ-ள்.)
விடம்அள்ளி உண்ட கனி வாயனே - நஞ்சை
அள்ளிப்பருகிய கனிபோலுஞ் சிவந்த வாயனே!, நேயனே - (உயிர்களிடம்)
அன்புடையவனே!, அமலனே - தூயவனே!, அருமை ....... தேவனே!,
தெள்அமிர்த தாரையென மதுரம் கதித்த பைந்தேன் மடைதிறந்தது என -
தெளிந்த அமுதவொழுக்குப் போலவும்; இனிமை மிகுந்த புதிய தேன்
மடைதிறந்தது போலவும்; செப்பும் முத்தமிழினொடு - சொல்லப்படும்
முத்தமிழுடன், நாற்கவிதை நாற்பொருள் தெரிந்து - நால்வகைக்
கவிகளையும் நால்வகைப் பொருளையும் அறிந்து, உரைசெய் திறமையுடனே
- கூறும் ஆற்றலோடும், விள்அரிய காவியத்து உட்பொருள், அலங்காரம்,
விரிவு இலக்கண விகற்பம் - கூறுதற்கரிய காவியத்தின் உட்பொருளையும்
அணியையும் விரிவான ஐவகை யிலக்கணத்தையும், வேறும்உள தொன்னூல்
வழக்கும் உலகத்து இயல்பும் மிக்கப் பிரபந்த வன்மை உள்ள எல்லாம்
அறிந்து - மற்றும் இருக்கின்ற பழைமையான நூல்வழக்கையும்
உலகவழக்கையும் மிகுந்த பிரபந்தங்களின் சிறப்பையும் மேலும் உள்ள
யாவற்றையும் அறிந்து, அலைஒடுங்கும் கடலைஒத்து - அலை அடங்கிய
கடலைப்போல விருந்து, அதிகசபை கண்டபோது - பேரவையைப் பார்த்த
காலத்தில், ஓங்குஅலை ஒலிக்கின்ற கடல்போல் பிரசங்க மது உரைப்பவன்
கவிஞன் ஆகும் - பேரலை முழங்கும் கடலைப்போலச் சொற்பொழிவு
செய்பவன் கவிஞன் ஆவான்.