பக்கம் எண் :

117

     (வி-ரை.) முத்தமிழ் : இயல், இசை, நாடகம். நாற்கவிதை : ஆசு,
மதுரம், சித்திரம், வித்தாரம். நாற்பொருள் : அறம், பொருள், இன்பம், வீடு,
இலக்கண விகற்பம் : எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி, பிரபந்தம் :
சிறு நூல்கள். அவை: பிள்ளைத்தமிழ். பரணி, கலம்பகம் முதலியன.

              76. நற்சார்பு

காணரிய பெரியோர்கள் தரிசனம் லபிப்பதே
     கண்ணிணைகள் செய்புண் ணியம்;
  கருணையாய் அவர்சொல்மொழி கேட்டிட லபிப்பதுஇரு
     காதுசெய் திடுபுண் ணியம்;
பேணிஅவர் புகழையே துதிசெய லபித்திடுதல்
     பேசில்வாய் செய்புண் ணியம்;
  பிழையாமல் அவர்தமைத் தொழுதிட லபிப்பதுகை
     பெரிதுசெய் திடுபுண் ணியம்;
வீணெறிசெ லாமலவர் பணிவிடை லபிப்பதுதன்
     மேனிசெய் திடுபுண் ணியம்;
  விழைவொடவர் சொற்படி நடந்திட லபிப்பதே
     மிக்கபூ ருவபுண்ணியம்;
ஆணவம் எனுங்களை களைந்தறி வினைத்தந்த
     அண்ணலே! அருமை மதவேள்
  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
     அறப்பளீ சுரதே வனே!


     (இ-ள்.)
ஆணவம்எனும் களைகளைந்து அறிவினைத் தந்த அண்ணலே
- நான் என்னும் களையை யெடுத்து, அறிவையருளிய பெரியோனே!, அருமை
..... தேவனே!, காண்அரிய பெரியோர்கள் தரிசனம் லபிப்பது
கண்இணைகள்செய் புண்ணியம் - பார்த்தற்கரிய பெரியோர்களின் சேவை
கிடைப்பது இருவிழிகளின் நல்வினையாகும், கருணையாய் அவர் சொல்மொழி
கேட்டிட லபிப்பது இரு காது செய்திடு புண்ணியம் - அவர்கள் அருளுடன் கூறும்