மொழியைக்
கேட்கக் கிடைப்பது இரு காதுகளும் செய்த நல்வினையாகும்,
அவர் புகழையே பேணித் துதிசெய லபித்திடுதல் பேசில்வாய் செய்புண்ணியம்
- அவர்களுடைய புகழையே விரும்பிப் போற்றிடக் கிடைப்பது கூறினால்
வாய்செய்த நல்வினை ஆகும், அவர்தமைப் பிழையாமல் தொழுதிட லபிப்பது
கைபெரிது செய்திடு புண்ணியம் - அவர்களைத் தவறாமல் வணங்கக்
கிடைப்பது கைகள் பெரிதும் செய்து நல்வினையாகும், வீண்நெறி செலாமல்
அவர் பணிவிடை லபிப்பது தன்மேனி செய்திடு புண்ணியம் - பயனற்ற
வழிகளிற் செல்லாமல் அவர்களுக்குத் தொண்டு செயக் கிடைப்பது தன்மெய்
செய்திட்ட நல்வினை ஆகும். விழைவொடு அவர் சொற்படி நடந்திட
லபிப்பது மிக்க பூருவ புண்ணியம் - விருப்பத்துடன் அவர் கூறியவாறு
நடந்திடும் பேறு கிடைப்பது முற்பிறப்பிற் செய்த பெரிய வினையாகும்.
(வி-ரை.) நான்
என்னும் செருக்கு ஆணவமலம். (யாவும்
இறைவனாலே நடைபெறுகின்றன என்ற எண்ணத்தைவிட்டு நானே
செய்கிறேன் என்று நினைத்துக்கொள்வது) ‘நல்லாரைக் காண்பதும் நன்றே'
எனத் தொடங்கும் ஒளவையார் பொன்மொழி இங்குக் கருதத்தக்கது.
(க-து.) பெரியோர்களைக் கண்டு பழகி
அவர் சொற்படி
நடந்துவருவது நல்லது.
77.
பிறந்தநாளுடன் வரும் வாரத்தின் பலன்
சென்மநட் சத்திரத் தாதிவா ரம்வரின்
தீரா அலைச்ச லுண்டாம்;
திங்களுக் காகில்வெகு சுகபோ சனத்தினொடு
திருமாதின் அருளும் உண்டாம்,
வன்மைதரும் அங்கார வாரம்வந் தாற்சிறிதும்
வாராது சுகம தென்பார்;
மாசில்பல கலைபயில்வர் மேன்மையாம் புந்தியெனும்
வாரத் துடன்கூ டினால்;
|
|