நன்மைதரு
குருவார மதுசேர்ந்து வரில்ஆடை
நன்மையுட னேவந் திடும்;
நாரிய ருடன்போகம் மிகவும்உண் டொருவெள்ளி
நல்லவா ரத்தில் வந்தால்;
அன்மருவு பீடையுண் டாமென்பர் சனியனுக்(கு);
அமலனே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
|
(இ-ள்.) அமலனே
- தூயவனே!, அருமை ........ தேவனே!, சென்ம
நட்சத்திரத்து ஆதிவாரம்வரின் தீரா அலைச்சல் உண்டாம் - பிறந்த
நாளுடன் ஞாயிற்றுக்கிழமை வந்தால் நீங்காத அலைச்சல் உண்டாகும்,
திங்களுக்காகில் வெகு சுகபோசனத்தினோடு திருமாதின் அருளும் உண்டாம்
- திங்கள் வந்தால் மிகவும் நல்லுண்டியோடு திருமகளின் அருளும்
கிடைக்கும், வன்மைதரும் அங்கார வாரம் வந்தால் சிறிதும் சுகமது வாராது
என்பர் - வலிய செவ்வாய்க்கிழமை வந்தாற் சற்றும் நலம் கிடையாது என்று
கூறுவர், மேன்மைஆம் புந்தியெனும் வாரத்துடன் கூடினால் மாசுஇல்
பலகலை பயில்வர் - உயர்வான புதன் கிழமையுடன் (பிறந்த நாள்) சேர்ந்தாற்
குற்றமற்ற பல நூல்களையும் ஆராய்வார், நன்மைதரு குருவாரமது
சேர்ந்துவரில் ஆடை நன்மையுடனே வந்திடும் - நலந் தரும்
வியாழக்கிழமை சேர்ந்து வந்தால் ஆடைகள் நலம்பெறக் கிடைக்கும், ஒரு
நல்ல வெள்ளி வாரத்தில் வந்தால் நாரியருடன் மிகவும் போகம் உண்டு -
ஒப்பற்ற நல்ல வெள்ளிக்கிழமையில் வந்தாற் பெண்களின் இன்பம் மிகவும்
கிடைக்கும். சனியனுக்கு அல்மருவு பீடை உண்டாம் என்பர் - சனிக்கிழமை
வந்தால் மயக்கந் தரும் நோய் உண்டாகும் என்பர்.
(வி-ரை.)
அல்
- இருள். இது மயக்கத்தை யுணர்த்தியது.
|