பக்கம் எண் :

120

               78. ஏது?

பொன்னாசை உள்ளவர்க் குறவேது? குருவேது?
     பொங்குபசி யுள்ள பேர்க்குப்
  போதவே சுசியேது? ருசியேது? மயல்கொண்டு
     பொதுமாதர் வலைவி ழியிலே
எந்நாளும் அலைபவர்க் கச்சமொடு வெட்கமே
     தென்றென்றும் உறுகல் விமேல்
  இச்சையுள பேர்க்கதிக சுகமேது? துயிலேது?
     வெளிதாய் இருந்து கொண்டே
பன்னாளும் அலைபவர்க் கிகழேது? புகழேது?
     பாரிலொரு வர்க்க திகமே
  பண்ணியிடு மூடருக் கறமேது மறமலால்?
     பகர்நிரயம் ஒன்று ளதுகாண்!
அன்னாண வருகரி உரித்தணியும் மெய்யனே!
     அமலனே! அருமை மதவேள்
  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
     அறப்பளீ சுரதே வனே!


     (இ-ள்.)
அல்நாண் வருகரி உரித்து அணியும் மெய்யனே - இருள்
நாணுமாறு (கருநிறத்துடன்) வந்த யானையின் தோலை உரித்து அணியும்
மேனியனே!, அமலனே - குற்றம் அற்றவனே!, அருமை ...... தேவனே!,
பொன்ஆசை உள்ளவர்க்கு உறவுஏது குருஏது - பொருளாசை பிடித்தவர்க்குச்
சுற்றமும் ஆசிரியரும் இல்லை, பொங்குபசி உள்ளபேர்க்குப் போதவே சுசிஏது
ருசிஏது - மிகுதியான பசியுடையோர்க்கு நிறைந்த தூய்மையும்
உணவினிமையும் பார்த்தல் இயலாது. பொதுமாதர் விழிவலையிலே எந்நாளும்
அலைபவர்க்கு அச்சமொடு வெட்கம் ஏது - பொதுப் பெண்களின் கண்வீச்சில்
எப்போதும் அகப்பட்டு உழல்பவர்க்கு அச்சமும் நாணமும் இல்லை.
என்றென்றும் உறுகல்விமேல் இச்சையுள பேர்க்கு அதிக