பக்கம் எண் :

121

சுகம்ஏது துயில்ஏது - எப்போதும் சிறந்த கல்வியின் மேல் விருப்பம்
உடையோர்க்கு மிக வசதியிலும் தூக்கத்திலும் மனம் நாடாது, எளிதாய்
இருந்துகொண்டே பலநாளும் அலைபவர்க்கு இகழ்ஏது புகழ்ஏது - எளிய
வாழ்வில் இருந்து பலநாளும் திரிபவர்க்கு இகழ்ச்சியும் புகழ்ச்சியும் இல்லை,
பாரில் ஒருவர்க்கு அதிகமே பண்ணியிடும் மூடருக்கும் மற்ற அலால் அறம்
ஏது - உலகில் ஒருவருக்குத் துன்பத்தையே செய்யும் பேதையருக்குப்
பாவமன்றிப் புண்ணியம் இல்லை, பகர்நிரயம் ஒன்று உளது - கூறப்படும்
நரகம் ஒன்று இருக்கிறது.


     (வி-ரை.)
அதிகம் - அளவுகடத்தல்; (வரம்பு மீறுதல்) - எனவே
தீமை செய்தலைக் குறிக்கும்.

         79. மழைநாள் குறிப்பு

சித்திரைத் திங்கள் பதின் மூன்றுக்கு மேல்நல்ல
     சீரான பரணி மழையும்,
  தீதில்வை காசியிற் பூரணை கழிந்தபின்
     சேரும்நா லாநா ளினில்
ஒத்துவரு மழையும், அவ் வானியில் தேய்பிறையில்
     ஓங்கும்ஏ காத சியினில்
  ஒளிர்பரிதி வீழ்பொழுதில் மந்தார மும் மழையும்,
     உண்டா யிருந்தாடியில்
பத்திவரு தேதி ஐந்தினில் ஆதி வாரமும்
     பகரும்ஆ வணிமூ லநாள்
  பரிதியும் மறைந்திடக் கனமழை பொழிந்திடப்
     பாரில்வெகு விளைவும் உண்டாம்;
அத்தனே! பைங்குவளை மாலையணி மார்பன் ஆம்
     அண்ணல் எமதருமை மதவேள்
  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
     அறப்பளீ சுரதே வனே!


     (இ-ள்.)
அத்தனே - தலைவனே!, பைங்குவளை மாலை அணி
மார்பன் ஆம் அண்ணல் எமது அருமை மதவேள் -