தமதுதளர்
வேளைக் கிலாதஓர் மனைவிஏன்?
சரசத் திலாதநகை ஏன்?
சாம்மரண காலத்தில் உதவாத புதல்வன் ஏன்?
தரணிமீ தென்பர் கண்டாய்!
அமரர்க்கும் முனிவர்க்கும் ஒருவர்க்கும் எட்டாத
ஆதியே! அருமைமத வேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
|
(இ-ள்.) அமரர்க்கும்
முனிவர்க்கும் ஒருவர்க்கும் எட்டாத ஆதியே -
வானவர்க்கும் முனிவர்க்கும் பிறரெவர்க்கும் நெருங்கற்கியலாத முதல்வனே!,
அருமை ..... தேவனே!, தரணிமீது சமயத்தில் உதவாத நிதியம் ஏன் -
உலகில் வேண்டிய காலத்திற் பயன் படாத செல்வம் எதற்கு?, மிக்க துயர்
சார்பொழுது இலாத கிளை ஏன் - மிகுதியான துன்பம் உண்டானபோது
பயன்படாத உறவு எதற்கு?, சபைமுகத்து உதவாத கல்வி ஏன் -
அவைக்களத்திற் பயன்படாத படிப்பு எதற்கு?, எதிரி வரும் சமரத்து இலாத
படை ஏன் - பகைவன் எதிர்த்த போரிற் பயன்படாத படை எதற்கு?,
விமலனுக்கு உதவாத பூசை ஏன் - தூயவனான இறைவனுக்குப் பயன்படாத
வழிபாடு எதற்கு?, நாளும் இருள் வேளைக்கு இலாத சுடர் ஏன் -
எப்போதும் இருட்பொழுதில் ஒளிதராத விளக்கு எதற்கு?, வெம்பசிக்கு
உதவாத அன்னம் ஏன் - கொடிய பசியைத் தணிக்கப் பயன்படாத உணவு
எதற்கு?, நீடு குளிர் வேளைக்கு இலாத கலை ஏன் - நீண்ட குளிர்
காலத்திற்குப் பயன்தராத ஆடை எதற்கு?, தமது தளர் வேளைக்கு இலாத
ஓர் மனைவி ஏன் - தங்களின் சோர்வு காலத்திற்கு உடனிராத ஒரு
மனைவி எதற்கு?, சரசத்து இலாத நகை ஏன் - விளையாட்டின்போது
இல்லாத நகைப்பு எதற்கு?, சாம் மரண காலத்தில் உதவாத புதல்வன் ஏன்
- உயிர்விடும் இறுதிப்போதிற் பயனற்ற மகன் எதற்கு?, என்பர் - என்று
(அறிஞர்) கூறுவர். |
|
|
|